பிரதமர் மோடி தலைமையில் காணொலியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 20, 2020

பிரதமர் மோடி தலைமையில் காணொலியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம்

சோனியா காந்தி, து.ராஜா, சீதாராம் யெச்சூரி, தளபதி மு.க.ஸ்டாலின்,  ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு


சென்னை,ஜூன்20- இந்திய - சீன எல்லை பிரச்சினை தொடர்பாக நாடுமுழுவதுமிருந்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங் கேற்ற அனைத்துக்கட்சிக் கூட் டம் நேற்று (19.6.2020) மாலை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தலைமையில்  நடைபெற் றது. இக்கூட்டத்தில்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதி முக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன் னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூ னிஸ்ட் சார்பில் து.ராஜா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீதாராம்யெச்சூரி, பிஜு ஜனதா தளம் சார்பில் நவீன் பட்நாயக், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் ஜெகன் மோகன் ரெட்டி, சிவசேனா சார் பில் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார், சமாஜ்வாதி சார்பில் அகிலேஷ் யாதவ் உள்பட பலர் பங்கேற்ற னர். மத்திய அரசு சார்பில் உள் துறை அமைச்சர் அமித்ஷா,  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியு றவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.


பிரதமர் எடுக்கும் நடவடிக்கை களுக்கு தி.மு.க. துணை நிற்கும்


இந்த கூட்டத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதா வது,


முதலில், எல்லையில் இறுதிவரை போராடி தங்கள் இன்னுயிரை தியாகம் செய் துள்ள அனைத்து இந்திய ராணுவ வீரர்களுக்கும், வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ள தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி உள்ளிட்ட அனைத்து இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும், தி.மு.க.வின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள் கிறேன். பிரதமர் குறிப்பிட்டுள் ளது போல், ‘உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது’.


அந்த தியாகங்கள் இந்த நாட்டை மேலும், மேலும் ஒரு மைப்படுத்தி நாட்டு மக்களுக்கு வலிமையை ஊட்டும். இன்று நாம் மிக கடினமான தருணத்தில் இருக்கிறோம். ஒருபக்கம் கரோனா பேரிடருடனான போராட் டம். இன்னொரு பக்கம் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி. தி.மு.க.வை பொருத்தவரை இதுபோன்ற காலங்களில் நாட்டின் நலன் சார்ந்து நிற்கும் இயக்கம்.


இந்தியாவின் எல்லைகளை பாதுகாத்திடவேண்டும் என்ற ஒற்றை நோக்கோடுதான் நாம் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறோம். அதில் இருவேறு கருத்துக்கு இட மில்லை. நமது வீடான இந்திய திருநாட்டை பாதுகாக்க நாட் டிற்கே முன்னுரிமை. தன்னு டைய நிலத்திற்கும், மக்களுக்கும் வரும் சவால்களை முறியடிக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. தி.மு.க.வை பொறுத்தவரை இந்த நாட்டு பிரதமர்களின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறோம்.


அனைத்துக் கட்சிகள் கூட் டத்தை கூட்டியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்ப தில் எங்களுக்கு எவ்வித தயக்க மும் இல்லை. 1962ஆம் ஆண்டு இந்தியசீன போரின் போது, சீனாவை முதலில் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது தி.மு.க. தான். தி.மு.க. சில மணி நேரங்களிலேயே நிதி திரட்டி ‘பாதுகாப்பு நிதி’ வழங்கியது. தி.மு.க.வினர் அனைவரும், எங்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அன்று கூறியது போல், ‘இந்த மண்ணின் மைந்தர்கள்’, என்ற உரிமையும், உணர்வும் மிகக் கொண்டவர்கள்.


அனைத்து தருணங்களிலும் நாட்டின் நலனுக்கே முன்னு ரிமை அளித்த அண்ணா மற்றும் கலைஞரின் தொலைநோக்கு பார்வையில் தி.மு.க. வளர்ந்தது. இன்று அத்தகைய தலைவர்க ளின் வழிநின்று, நாட்டின் நலன் போற்றி, இந்தியா என்னும் எண் ணத்தை பாதுகாத்திட உழைத் திடும் இயக்கத்தை வழிநடத்து கிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். 1962ஆம் ஆண்டு போரின் போது முதல் களப்பலி யானவர் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் செல்வராஜ் என்பதை நினைவு கூர்கிறேன். இன்றைக்கு 58 ஆண்டுகள் கடந்த பின்னரும் ராணுவ வீரர் பழனியை தமிழகம் தியாகம் செய்திருக்கிறது. நாட்டை பாதுகாக்க தி.மு.க.வும், தமிழக மக்களும் முதலில் வரு வார்கள். இந்திய நாட்டின் ஒரு மைப்பாட்டையும், இறையாண் மையையும் பாதுகாக்க பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் தி.மு.க. உறுதியுடன் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். போர்க் குரல் ஒலிக்கும் போது நாம் பின்வாங்க மாட்டோம். ஒரே நாடாக நாம் முன்சென்று, இந்திய நாட்டின் பெருமையை நிலைநாட்டிடுவோம்.


இவ்வாறு அவர் பேசினார்.


உளவுத்துறையின் தோல்வியா?- சோனியா காந்தி கேள்வி


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:-


கடந்த மே 5ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதிவரை பொன் னான நேரத்தை மத்திய அரசு வீணாக்கி விட்டது. பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைக்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த தவறிவிட்டது. அதனால், 20 இராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். பலர் காய மடைந்துள்ளனர்.


லடாக்கில் இந்திய பகுதியில் சீன ராணுவம் எப்போது ஊடுரு வியது? அங்கு வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் நடப்பதாக வெளிநாடுகளில் உளவு பார்க் கும் இந்திய உளவு அமைப்புகள் தகவல் சொல்லவில்லையா? உள வுத்துறை தோல்வியால் இச்சம்ப வம் ஏற்பட்டதா? அடுத்து என்ன செய்ய உத்தேசம்? எல்லைக் கோடு பகுதியில் ஏற்கெனவே இருந்த நிலை நிலைநாட்டப்படும் என்றும், சீன இராணுவம் தனது பழைய இடத்துக்கு திரும்பிச் செல்லும் என்றும் பிரதமரிடம் நாட்டு மக்கள் உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறார்கள்.


இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.


கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி அன்று இந்திய இராணுவத் துக்கும், சீன இராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோத லில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50க் கும் மேற்பட்ட வீரர்கள் காயம டைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட வில்லை. இந்த விவகாரம் குறித் தும், இந்தியா தரப்பில் எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி அனைத்துக்கட்சித் தலைவர்க ளிடம் விளக்கம் அளித்தார்.


எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவவில்லை; நமது பகுதி யையும் கைப்பற்றவில்லை:


பிரதமர் மோடி திட்டவட்டம்


நமது நாட்டின் எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவவில்லை, இந்தியாவிற்குள் ஊடுருவ முயற் சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது என பிரத மர் மோடி கூறினார்.


நமது நாட்டின் எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவவில்லை. இந்தியாவிற்குள் ஊடுருவ முயற் சித்தவர்களுக்கு தக்க பாடம் கற் பிக்கப்பட்டுள்ளது. சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது எந்த ஒரு நிலையையும் கைப்பற்றவில்லை. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது.


நமது நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைககளை நமது ஆயுதப்படை மேற்கொள் ளும் .ஒரே சமயத்தில் பல முனை களுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது.


கடந்த சில ஆண்டுகளில், எல்லைகளை பாதுகாக்க, உள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். அதே போன்று நமது ஆயுதப் படைகளின் தேவைகள், விமா னங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவு கணை பாதுகாப்பு அமைப்புகள் என முக்கியத்துவம் அளிக்கப்படு கிறது.


இவ்வாறு மோடி பேசினார்.


No comments:

Post a Comment