கரோனா தொற்றுநோயின் புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 20, 2020

கரோனா தொற்றுநோயின் புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா, ஜூன் 20- உலக சுகாதார அமைப்பின்  தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:-


அமெரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிக கரோனா பாதிப்பு இருந்து வருகிறது. நாம் தற்போது புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். கரோனா இப்போதும் அதிவேகமாகவே பரவிக் கொண்டிருக்கிறது.ஆகையால் முகக் கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது, கை கழுவுதல் ஆகியவை தற்போதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக உலக நாடுகள் அனைத்தும் மிக மிக கவனமானவும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது கடின மான பயணமாக இருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.


வருவாய் நிர்வாக ஆணையர் நியமனம்


சென்னை,ஜூன்20- வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் சுகா தாரத்துறை செயலராக நியமிக்கப்பட்டதால் மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.


No comments:

Post a Comment