ராஜ் பி. சிங்
கோவிட் - 19 நோயாளிகள் சிகிச்சைக்காக சென்ற போது நாட்டில் உள்ள பல தனியார் மருத்துவ மனைகள் மிக அதிக அளவிலான மருத்துவக் கட்ட ணத்தை விதித்து மக்களைச் சுரண்டுவதாக இந்திய தொலைக் காட்சி செய்தி நிறுவனம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. இவ்வாறு மக்களை துன்புறுத்தும் வகையில், அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் தேவை என்ன உள்ளது என்பது நமக்கு தெளிவாகத் தெரியவில்லை. நாட்டில் உள்ள உயர் மருத்துவ மனைகளில் வசூலிக்கப்படும் அதிக அளவிலான மருத்துவக் கட்டணங்கள் மக்களால் நன்றாக அறியப் பட்டவையே ஆகும். இந்த மருத்துவமனைகளில் ஏதேனும் ஒன்றில், ஒரு நுணுக்கமான அறுவை சிகிச்சையை செய்து கொண்ட ஒருவராலோ அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டவராலோ இது பற்றி சாட்சிய மளிக்க முடியும். இப்போது உள்ள விவாதமே, நாம் இப்போது சிக்கித் தவிக்கும் கோவிட் -19 தொற்று நோய் காலத்தில் இத்தகைய அதிகப்படியான மருத்துவக் கட்டணங்களை வசூலிப்பது நியாயப்படுத்தப்படு கின்றதா அல்லது எல்லா காலத்திலும் அவ்வாறு செய்வது நியாயப் படுத்தப்படுகின்றதா என்பதுதான்.
தனியார் மருத்துவமனைகளில்
அதிக படுக்கைகள்
என்றாலும், இந்த கேள்விக்கான பதிலை நாம் தேட முயலும் முன், அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி ஒன்றும் எழுகிறது. இந்தியா போன்றதொரு ஏழை நாட்டில் இந்த அளவுக்கு மிகப் பல எண்ணிக்கை கொண்ட தனியார் மருத்துவம னைகளை நாம் ஏன் வைத்துக் கொண் டிருக்கிறோம் என்பதுதான் அக்கேள்வி. பொதுத்துறை மருத்துவ மனைகளில் இருக்கும் படுக்கைகளின் எண்ணிக் கையை விட , நமது தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவிலான எண்ணிக்கை கொண்ட படுக் கைகள் உள் ளன. நாடு முழுவதிலும் 19 லட்சம் மருத் துவமனைப் படுக்கைகளும், 95,000 தீவிர சிகிச்சைப் படுக்கைகளும், 48,000 வென்டிலேட்டர்களும் உள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும் பாலானவை உத்தரப் பிரதேசம், மகாராட்டிரா, தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்களில் மட்டுமே குவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, டில்லி, மேற்கு வங்கம் தவிர்த்த இதர மாநிலங்களின் பொதுத் துறை மருத்துவ மனைகளில் உள்ள படுக்கைகள், வென்டி லேட்டர்களின் எண்ணிக்கையை விட அதிக எண் ணிக்கையிலானவை தனியார் துறை மருத்துவ மனைகளில் உள்ளன என்று நோய் கண்டறிவதற்கும், பொருளாதார மற்றும் கொள்கைக்குமான மய்யம் மதிப்பிட்டுத் தெரிவிக்கிறது.
நாட்டில் தனியார் மருத்துவமனைகள் பெருகியதற்கான காரணம்
தனியார் மருத்துவமனைகள் இந்த அளவுக்கு மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதற்கான காரணமே போதுமான அளவு பொதுத் துறை மருத்துவ மனை வசதிகள் பொதுமக்களுக்குக் கிடைப்பதில்லை என்பது தான். இந்த நிலை வளர்ந்து வந்திருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, ஒரு மிகப் பெரிய அளவிலான சுகாதார மருத்துவ வசதிகளை பொது மக்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்தியது மிகச் சரியான செயலாகும். வளர்ந்து வரும் ஒரு நாட்டில், நகர மய்யங்களில் இருந்து விலகி இருக்கும் கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதார வசதிகள் செய்து தருதல், நோய் தடுப்பு நடவடிக்கைகளை, நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தாய்-சேய் நலம் மற்றும் காசநோய் போன்ற பொதுவான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது ஆகிய செயல் பாடுகளுக்கு முன் னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில பத்தாண்டு காலத்தில் மருத்துவ சுகாதார செயல்பாட்டு அளவுகளில் பெருமைப்படத்தக்க அளவில் இந்த செயல்பாடுகளை நாம் மிகச் சிறப்பாகவே செய்து வந் துள்ளோம். ஆனால், இக் கால கட்டத்தில் போதுமான அளவில் மருத்துவமனை படுக்கைகளையும், சிறப் பான மருத்துவ வசதிகளையும் பொது மருத்துவத் துறையால் மக்களுக்கு அளிக்க இயல வில்லை. அதே நேரத்தில், சமூக பொருளாதார மற்றும் இதர நிலை களில் வளர்ந்து வந்த மத்திய பிரிவு மக்களாலும், நாட்டில் வளர்ந்து வந்த பொதுவான பொருளாதார வளர்ச்சி நிலையா லும் தரம் வாய்ந்த நல்ல சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளின் தேவை வெடித்துக் கிளம்பியது. இந்தத் தேவையை தனியார் மருத்துவத் துறை தனக்கு சாதகமாகவும், லாபமாகவும் பயன் படுத்திக் கொண்டது.
பொது சுகாதார மருத்துவத்துறைக்கு போதுமான முதலீடு இல்லை
இந்தியாவில் தனியார் மருத்துவத் துறை ஆதிக்கம் செலுத்துவதற்கான இரண்டாவது காரணம், பொது சுகாதார-மருத்துவத் துறையில் போதுமான அளவுக்கு முதலீடு செய்யப்படவில்லை என்பதுதான். சுகாதாரம் மற்றும் பொது மருத்துவ வசதிகளுக்காக இந்திய அரசு மிகமிகக் குறைந்த அளவில், அதாவது 1 . 3 சதவிகித ஜி.டி.பி. (GDP) என்ற மிகமிகக் குறைந்த அளவில்தான் செலவழிக்கிறது. நமது உடனடித் தேவைகளுக்காக இத்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைந்தது இரு மடங்கு அளவிலாவது உயர்த்தப்பட வேண்டும். இவ்வாறு ஒதுக்கப்படும் நமது நிதி பொருத் தமான முறையில் செலவிடப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு மேலும் மேலும் கட்டுப்பாடு நிறைந்த நிர்வாக அமைப்பும், மிகுந்த வெளிப் படைத்தன்மையிலான செயல் பாடுகளும் மிகவும் தேவை யானவையாகும். அரசு மருத்துவர்கள் தனியாக நோயாளிகளுக்கு மருத்துவ சேவை அளிக்க வேண்டிய தேவையை போக்கும் அளவுக்கு சிறப்பு மருத்துவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீடுகள் அரசால் சரி செய்யப்பட வேண்டும்.
பல்வகைப்பட்ட தனி மருத்துவர்கள், மருத்துவமனைகள்
இந்தியாவில் உள்ள மருத்துவத் துறை எல்லா இடங் களிலும் ஒன்று போலவே இருப்பவை அல்ல. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தகுதி பெறாத, பயிற்சி பெறாத மருத்துவர்கள், பெரும்பாலும் கிராமப்புறங் களில், மருத்துவ தொழில் செய்து வருவதாக மதிப் பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர், நியாயமான ஒரு கட்டணத்தை பெற்றுக் கொண்டு, அடிப்படை மருத்துவ-சுகாதார சேவை புரிந்து வருகின்றனர். ஆயுர்வேதம், ஓமியோபதி போன்ற மாற்று மருத்துவ நடைமுறைகளில் தாங்கள் தனிச் சிறப்பு பெற்றவர்கள் என்று அவர்களில் சிலர் கூறிக் கொண்டாலும், அது பெரும்பாலும் மெய்ப்பிக்கப் படுபவைகளாக இருப்பதில்லை. அவர்களில் சிலர் அறுவை சிகிச்சை செய்வதிலும் துணிவுடன் ஈடு பட்டனர். இதற்கு எதிர் வரிசையில், நல்ல நவீன மருத்துவக் கருவிகளுடன், சிறந்த பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்ட கார்ப்பரேட் மருத்துவமனைகள் மிகச் சிறந்த சேவையை, ஓர் உயர்ந்த அளவிலான கட்டணத்தில் ஆற்றி வருகின்றன. இத்தகைய மருத்துவ மனைகள் பெரும்பாலும் மெட்ரோ நகரங்களில் மாபெரும் செலவில் அமைக்கப்பட்டவையாகும். அயல்நாடு களில் மிகப் பெரிய அளவில் வருவாய் ஈட்டும் வாய்ப்புள்ள சிறப்பு மருத்து வர்களின் மூளையை சலவை செய்து, அவர்களை தொடர்ந்து இந்தியா விலேயே இருக்கும்படியோ அல்லது அயல்நாட்டு மருத்துவமனைகளில் இருந்து திரும்பி வருவதற்கோ ஊக்கம் அளித்து தங்கள் மருத்துவமனைகளில் அவர்களை மிகப் பெரிய இந்திய தனியார் மருத்துவ மனைகள் நியமித்துக் கொள்கின்றன. ஒன்றுக்கொன்று எதிரான இத்தகைய இரு தரப்பு மருத்துவர்களுக்கு இடையேயும், பெரும் எண்ணிக்கையிலான தனியார் மருத்துவர்களுக்கு இடையேயும், பலதரப்பட்ட விரி வான மருத்துவ சேவை நோயாளிகளுக்கு வழங்கப் படுகிறது. அத்தகைய மருத்துவமனைகளில் சில அறக்கட்டளை களாலும், தர்ம நிறுவனங்களாலும், மத அமைப்புகளாலும் நடத்தப்படுகின்றன. பெரும் பாலும் இவை நியாயமான மருத்துவக் கட்டணத்தில் தரம் மிகுந்த மருத்துவ சேவையை அளித்து வருகின்றன.
மருத்துவர்களின் ஏற்றத் தாழ்வுகள்
இந்தியாவில் கிடைக்கும் பல்நிலை மருத்துவ சேவை களின் தரவரிசை, இந்திய மக்களிடையே உள்ள செல்வம் மற்றும் அவர்கள் பெற்று வரும் வருவாய் பற்றிய தர வரிசையை பிரதிபலிப்பதாக இருப்பதாகும். பெரும் பணக் காரர்களில் முதல் ஒரு சதவிகித (1%) அளவில் உள்ள இந்தியர்களிடமே, கீழ்நிலையில் உள்ள 70% ஏழை மக் களின் செல் வத்தைப் போன்று நான்கு மடங்கு செல்வம் இருப் பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்கள், தரம் மிகுந்த மருத்துவ-ஆரோக்கிய வசதிகளுக்காக பணம் செலுத்தி, கேட்டு, அவற்றை பெரும்பாலும் பெற்றுவிடுகின்றனர். இவ்வாறு செய்ய இயலும் என்பதைப் பார்க்கும் நடுத்தரப் பிரிவு மக்களும் தங்களால் செலுத்த இயன்ற கட்டணத்தில் மருத்துவ சேவை அளிக்கப்பட வேண்டும் என்று கோரத் தொடங்கிவிட்டனர். எஞ்சியுள்ள 70% ஏழைகள், என்னதான் நடக்கும் என்பதை ஊகித்து தெரிவிக்க இயலாத பொது மருத்துவ-சுகாதார சேவைத் துறை மற்றம் குறைந்த செலவில் மருத்துவம் செய்யும் மருத் துவர்களின் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் கருணைக்கு விடப்பட்டுவிடுகின்றனர்.
இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?
பொது சுகாதார பாதுகாப்பு நடைமுறைக்கு ஓர் உயர்ந்த அளவு செலவை அரசு செய்வது கட்டாயத் தேவையாகும். வளர்ந்து வரும் ஒரு நாட்டினால், கூறப்போனால் எந்த ஒரு நாட்டினாலும் கூட, மக் களின் ஒட்டு மொத்த மருத்துவ-சுகாதார பாதுகாப்பை தனியார் துறை மருத்துவத்திடம் விட்டுவிட முடியாது. பெரும்பாலும் காப்பீடு அடிப்படையிலான தனியார் துறை மருத்துவ வசதிக்காக தனது (GDP) இல் இருந்து பெரும்பகுதியான 15% சதவிகிதம் அளவில் செலவு செய்வது மட்டுமன்றி, அய்ரோப்பிய நாடு களில் இருப்பதைப் போன்ற ஏழைகளுக்கான சுகா தார மருத்துவ பாதுகாப்பு திட்டங்களை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது. இத்திட்டத்தின்படி உலக ளாவிய சுகாதார மருத்துவ பாதுகாப்பு திட்டங்களுக்கு அமெரிக்க அரசு நிதி உதவி அளித்து வருகிறது. (எடுத் துக்காட்டாக, இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார மருத்துவ பாதுகாப்பு சேவையைக் குறிப்பிடலாம்.)
சுகாதார மருத்துவ வசதிகளுக்காக அரசினால் செய்யப் படும் செலவு, சாட்சியத்தின் அடிப்படையில் அமைந்ததாகவும், வெளிப்படைத் தன்மை கொண்ட தாகவும், முறையான கணக்கு பேணப்படுவதாகவும் இருக்க வேண் டும். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது முக்கியமாக அரசின் பொறுப்பாக இருக்க வேண்டிது அவசியம். மருத்துவ மாணவர் தேர்வில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் விரும்பிய விளைவுகளை அளித்துள்ளனவா என்பதை சரி பார்ப்பதும் தேவையானதே ஆகும்.
தனியார் மருத்துவமனைகளும், நிறுவனங்களும் கட்டுப்பாடுகளின் கீழ் கொண்டு வரப்பட வேண்டி யதும் அவசியம். மருத்துவ சேவை மற்றும் அறுவை சிகிச்சைக் கான செலவை, தனிப்பட்ட அமைப்புகளால் நிர்ணயிப்பதும், தணிக்கை செய்வதும் அவசிய மானவை. இவ்வாறு செய்வதனால், மிகச் சரியான செலவில் பொருத்தமான மருத்துவ சேவை அளிக்கப் படுகிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளச் செய்ய முடியும் என்பது மட்டுமன்றி, சந்தேகம் கொண்டுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நியாயமற்ற முறையில் பணம் செலுத்தும் படி கேட்பதை தடுக்கவும் செய்யும்.
மருத்துவமனைகளுக்கு சமூக பொறுப்பு
கோவிட்-19 தொற்று நோய் போன்ற ஒரு தேசிய பேரழி வில் இருந்து எந்த ஒரு மருத்துவ மனையோ, மருத்துவ-சுகாதார நிறுவனமோஅல்லது தனிப்பட்ட நபரோ லாபம் அடையக் கூடாது. மற்ற எந்த நிறுவ னத்தைப் போலவும், மருத்துவ சேவை தேவைப் படும்போது, அளிக்க வேண்டிய ஒரு சமூகப் பொறுப்பு மருத்துவ மனைகளுக்கும் உள்ளது. பெரும்பாலும் நாள் செல்லச் செல்ல லாபம் குறையும் என்ற விதியை பின்பற்றும் மருத்துவ சிகிச்சையில் நவீன சிகிச்சை முறைகளைக் கையாள வேண்டி நேரும்போது, சிறிது சிறிதாக கூடுதல் செலவு செய்ய வேண்டியிருந்தாலும், மொத்த செலவு அதிக அள விற்கு அதிகமானதாகவே ஆகிவிடும். கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் கோவிட்-19 நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச் சையில் பயன்படுத்தப்படும் ஒரு ஊசி மருந்தின் விலை 50,000 ரூபாய்க்கு மேல் ஆகக்கூடும். அத்தகைய சிகிச்சை அளிப்பது கூட நோயாளியின் நிலையை மிகச் சிறிய அளவிலேயே முன்னேற்றமடையச் செய்யும் என்பதை எடுத்துக் காட்டாகக் கூறலாம். மருத்துவ சேவை செலவைக் கட்டுப்படுத்தி உச்ச வரம்பு நிர்ணயிக்கும் போது, இத்தகைய செலவு மிகுந்த சிகிச்சை நடைமுறை களைக் கைவிட வேண்டிய தேவையை ஏற்படுத்தலாம். தங்களது லாபத்தை இழக்க, விட்டுக் கொடுக்க தனியார் மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும்; தயாராக இருப்பார்கள் என்பது மட்டுமன்றி, ஒரு தேசிய பேரிடரின் போது மருத்துவமனைகள் இழப்பை சந்திக்கவும் நேரக் கூடும். ஆனால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பு தாங்க முடியாத அளவில் ஆகிவிடும்போது, பணி யாளர்களை வேலையில் இருந்து நிறுத்தவும், படுக்கை வசதிகளை கை விடவும், மற்ற எந்த ஒரு வியாபாரத்தைப் போலவும் - ஒட்டு மொத்த மருத்துவ மனையையுமே மூட வேண்டியும் கூட நேரிடலாம். அதனால் யாருக்கும் எந்தவிதப் பயனும் இல்லை.
நன்றி: 'தி இந்து' 12-06-2020
த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment