சென்னை,ஜூன்12, கரோனா தொற்று தடுப்புப் பணி செயல்பாடுகளில் கடும் விமர் சனம் எழுந்து வந்த நிலையில் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப் பட்டுள்ளார். தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றப்பட்டு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மீண்டும் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பீலா ராஜேஷ் வணிகவரித்துறைச் செய லாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராதா கிருஷ்ணன் வருவாய் நிர்வாகத்துறை ஆணையராகவும் தொடர்ந்து நீடிப்பார் என தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment