விடுதலை ஏற்படுத்திய மாற்றமும் ஏற்றமும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 15, 2020

விடுதலை ஏற்படுத்திய மாற்றமும் ஏற்றமும்!


முனைவர் துரை.சந்திரசேகரன்


பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்


'விடுதலை' - தமிழினத்தின் பாதுகாப் புக்கு 'ராடார்' கருவியாகப் பயன்படுகிறது...


நோயாளித் தமிழர்கட்கு சிறந்த மருத் துவமனையாக நலம் செய்கிறது...


வாழ்வை பறிகொடுத்த பலருக்கு நல் வாழ்வு மய்யமாக வளம் சேர்க்கிறது...


இருட்டில் தவிக்கும் தமிழருக்கு வெளிச்சம் தரும் மின்சார நிலையமாக உதவுகிறது...


பறிகொடுத்த பல தமிழருக்கு காவல் நிலையமாகக் கண்டறிந்து கொடுக்கிறது...


இப்படியெல்லாம் 'விடுதலையின்' சிறப்பை வெளிப்படுத்தியவர் 58 ஆண்டு கால ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்கள்... பெருமைக்கும், அருமைக்கும் உரிய விடு தலை என் வாழ்வில் மாற்றத்தையும் ஏற் றத்தையும் மலரச் செய்தது என்பதை வாச கர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


என் கல்லூரியின் தொடக்க காலம்... 1970களில்... புதுமுக வகுப்பு மாணவன்... சனிக்கிழமை விரதம், ஏகாதசி விரதம் கட்டுப்பாட்டுடன் கடைபிடித்தவன்... ஒவ் வொரு சனி இரவு 3 மணி நேரத்துக்கும் குறையாமல் குறிஞ்சிப்பாடியில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனத்துக்காக சென்றிருப்பதும் துளசி தண்ணீர் பக்தியுடன் வாங்கி சுவைப்பதும் பெரும் சுகமாக கருதியவன்.


என் தந்தையார் பிரபல மந்திரவாதி எங்கள் வட்டாரத்தில், குத்துச் சண்டை பயில்வானும் கூட. தாயாரும் ஆழ்ந்த பக்தியே. ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி, அரியலூர் அருகே உள்ள கலியபெருமாள் கோவில் ஓரிரு முறை சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்ட குடும்பம். விசேட நாட்களில் வீட்டில் படையல்... சாப்பிட வைப்பதற்காக 20, 30 பிச்சைக்காரர்களை நான்தான் போய் அழைத்து வர வேண்டும். பெரிய கிராக்கி காட்டுவார்கள். கெஞ்சி அழைத்து வர வேண்டும்.


இப்படியே பக்தியினால் குடும்பம் பாழ்பட்டது என்றே சொல்ல வேண்டும். கடும் புயலில் பெரு மரம் முறிந்து விழு வதைப் போல் சீரோடு இருந்த குடும்பம் நலிவை நோக்கி பயணப்பட்டது. வைதீக மனப்பான்மை, ஆழமான பக்திப் போதை, போனவர் வந்தவருக்கெல்லாம் படையல், மூடநம்பிக்கை முனைப் வேருடன் குடும் பம் வீழ... இவையெல்லாம் போதாதா?


சரி... கல்லூரிக்கு வருவோம். மாலை 3 மணிக்கெல்லாம் வகுப்பு முடிந்து விடும். கடலூரிலிருந்து குறிஞ்சிப்பாடி திரும்பிட மாலை 6.30 மணிக்குத்தான் தொடர் வண்டி. 3 மணி நேரத்தை போக்குவதற்காக மாவட்ட மய்ய நூலகம் செல்வேன். செய்தித் தாள்கள் வாசிப்பதற்காக! அப்படி போகும்போதுதான்... எல்லா செய்தி இதழ் களும் வாசகர்கள் கையிலே... அவற்றில் ஏதாவது கிழே வந்து விழும் வரை காத் திருப்பேன். ஒரு ஏடு மட்டும் மேசையில் கிடக்கும். மற்ற செய்தி ஏடுகளுக்காக காத்திருக்கும் எனக்கு. 'விடுதலை' கண்ணில்பட்டது.


ஆரியத்தால் அனாதைகளாக்கப்பட்ட தமிழர்களை அனைத்து நலன்களுக்கும், வளங்களுக்கும் உரிமையுள்ளவர்களாக் குவதற்காக அரும் பாடுபட்ட ஏடு. மேசை யில் அனாதையாக! 'லை' முதலில் என்னை கவர்ந்தது. மேலோட்டமாகப் பார்த்தேன்... விரும்பி படிக்கத் தொடங்கினேன். மணப் புரட்சி... மந்த மாருதம்... பூகம்பம் ஏற்படு வதைப் போல உள்ளத்தில்... தோழர்களிடம் சொல்வதைப் போல... தொட்டேன் விடு தலையை - பற்றிக் கொண்டது என்னை! மின்சாரப் பாய்ச்சல்தான்! தனிநபர் வாழ் வில் மாற்றங்கள்... ஆயிரம் கேள்விகள்... என் குடும்பச் சூழல்... பக்தியால் ஏற்பட்ட பேரிழப்பு... எல்லாமும் என்னை அசைத் தது... போதாதற்கு வகுப்பில் என் தமிழ்ப் பேராசிரியர் - சீரிய மனித நேயம் த.பழ மலை அய்யாவின் கடவுள்களைப் பற்றிய கிண்டல்கள்... சீண்டல்கள்... ஒரு சுயமரியா தைக்காரனாக, பகுத்தறிவுவாதியாக மாறி னேன்... விடுதலையால் மாற்றப்பட்டேன் என்பதே உண்மை.


நான் 9ஆம் வகுப்பு படித்தபோது தி.மு.க. தோழர்களுடன் சென்று நெய்வேலி நகரியத்தில் தந்தை பெரியாரை பார்த்ததும், அவர் பேச்சைக் கேட்டதும், கழகத்தினர் நடத்திய ஊர்வலத்தைப் பார்த்ததும் மன தில் சலனத்தை ஏற்படுத்தியது உண்மை. அதனைத் தொடர வாய்ப்பில்லாத காரணத் தால் பெரிய மாற்றம் என்று சொல்லும்படி என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.


ஆனால் இப்போது அப்படி அல்ல... விடுதலையைப் படிக்க படிக்க அதுவரை என்னுள்ளத்தில் பற்றியிருந்த பழமை... மூடநம்பிக்கை... ஆட்டங்காணத் தொடங் கியது. ஒருவித பதட்டம்... புத்துணர்வு... புதுமை பற்றிக் கொள்ளத் தொடங்கியது. கடவுள்களைப் பற்றிய, மானுடத்தைப் பற்றிய, சுயமரியாதையைப் பற்றிய, விஞ்ஞான மனப்பான்மை பற்றிய, ஜாதி-மதங்களைப் பற்றிய, சிந்தனை, அச்சமற்ற தன்மைகள் பற்றிய, பழைய மரபுகளைப் பற்றிய... புதிய புதிய எண்ணங்கள் என்னுள் ளத்தில் இன்ப அதிர்வுகளாய் பளிச்சிடத் தொடங்கின. விடுதலை என்னை புதிய மனிதனாய் மாற்றியது. இன்று புதிதாய்ப் பிறந்தேன் என்று சொல்லும்படியான என் நிலையில் - நடைமுறையில் மாற்றம் மாற்றம்! மனித சமுதாயம் முழுமையான மாற்றம் பெற பெரியார் கொள்கையும், திராவிடர் கழகமும் தான் தேவை என்பதை உணர வைத்தது.


ஆண்டுகள் நகர - கல்லூரியில் இப் போது நான் பட்டப்படிப்பு மாணவன். நானும் நண்பர்களும் இணைந்து 'மாணவர் பகுத்தறிவுக் கழகம்' தொடங்கினோம். கடற்கரை மண்டபத்திலும், திருப்பாதிரிப் புலியூர் தொடர் வண்டி நிலைய நடை மேடையிலும் அடிக்கடி மாணவர்களுடன் பெரியார் கொள்கை விளக்கப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்திடவும் செய்தோம். பேராசிரியர் த.பழமலை அய்யாவும் கலந்து கொண்டு பேசுவார்.


கடலூருக்கு அய்யாவின் வருகை. அவர் பேசிய பொதுக் கூட்டம் - அவர் தங்கியிருந்த (பிரபல வழக்கறிஞர் எஸ்.ஜனார்த்தனம் இல்லம்) இல்லம் சென்று சந்தித்துப் பேசியது... எங்கள் பேராசிரியரை அறிமுகம் செய்தது... அப்போதைய கழகப் பொதுச் செயலாளர் - இன்றைய கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களை அழைத்து மாணவர் கழக தொடக்க விழா நடத்தியது. தொடர் கழகப் பணிகளில் நான்... சலிப்பின்றி அய்யாவின் கொள் கையை இயக்கத்தை இளைய தலைமுறையினரின் உள்ளத்தில் கொண்டு போய் சேர்த்திட அயராத உழைப்பு... கொள்கைக் காரனாக, கழகக் காரனாக மாறிய நான் குடும்பத்தையே மாற்றினேன். பெற்றோர் உள்பட இயக்க ஆதரவாளர்களாக மாறி னர். வீடு சுத்தமானது. ஆம்! கடவுள் - மத அடையாளங்கள் எதுவும் வீட்டில் இல் லாமல் ஆனது! மந்திரவாதி மாற்றம் பெற் றார். பூஜை, படையல், பண்டிகை எல்லாம் ஓடி மறைந்தன. விடுதலை ஏற்படுத்திய அறிவுத்தடம் என் குடும்ப வாழ்வில்... நம்பிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்தி புதுப் பாதை காட்டியது என்பதை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.


தன்மான உணர்வும், தன்னம்பிக்கை யும், பகுத்தறிவு உணர்ச்சியும் ஒரு மனித னைப் பற்றிக் கொண்டல் அவரவர் வாழ் வில் மாற்றம் நிச்சயம். பல நூறு இளை ஞர்கள் வாழ்வில் மாற்றம் பெற உதவிய வனாக நான் மனதிலே மகிழ்ச்சி. வறுமை யிலும் செம்மை என்பதைப் போல இயக் கமும், அய்யாவின் கொளகையும் நம் வாழ்வில் மிகப்பெரும் ஏற்றத்தை ஏற்படுத் தும் என்ற நம்பிக்கையோடு கழகப் பணி யாற்றினேன். பகுத்தறிவை முன்னிறுத்தியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க விடுதலையும், நூலகளும் உதவின.


பட்டப்படிப்பை தொடர முடியாத குடும்பச் சூழல். வாழ்வில் தான் வறுமை. இயக்கப் பணியில் முழுநேர தொண்டனைப் போல் தொண்டாற்றினேன். படிப்பைத் தொடர கடலூர் பெரியாரிய நெறியாளர் மறைந்த எஸ்.எஸ்.சுப்பராயன் அவர்கள் மூலம் ஆசிரியர் செய்த ஏற்பாடு உதவியது. மனிதநேயமும், தோழர்கள் நலனில் அக்க றையும் உள்ள தலைவரை நாம் பெற்றது நம் வாழ்வில் பெரும் பேறு. மகிழ்வோடும், மனதிருப்தியோடும் என் குடும்பம் இன்று!


மனித வாழ்வை மகத்துவம் மிக்கதாக மாற்றிடும் மருந்து பெரியார் கொள்கை எனும் அருமருந்து, எத்தனை கஷ்ட, நஷ் டங்கள், ஏற்ற - இறக்கங்கள், வெற்றி - தோல்விகள் வாழ்வில் ஏற்பட்டாலும் அவற்றை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்கு ஆட் படுத்தும் கொள்கை அய்யாவின் கொள்கை. கொள்கையை நாம் அறிந்து, புரிந்து வாழ்வில் நடைபோட வழிகாட்டும் கருவியே விடுதலை. விடுதலை படிக்கும் வரை தான் கசப்பு மருந்தைப்போல... படிக்க படிக்க... விடுதலையை படிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைதான். தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல் என்று புரட்சிக் கவிஞர் சொல்லுவார். அன்றன்றும் புதுமை... என்பதைப் போல வாசிக்க வாசிக்க விடுதலை ஏற்படுத்திடும் இன்பம்... மகிழ்ச்சி... ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து.


பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தைப் பாதுகாக்கக் கூடிய கருவிகளாக இந்து, தினமணி, கல்வி... போன்றவற்றைப் பற்றி எப்படியெல்லாம் சிலாகித்துப் பேசுவார்கள். வாரி அணைத்துக் கொள்வார்கள். அவர் களைப் போன்ற மனப்பான்மை திராவிடர் சமுதாயத்தில் தமிழினத்தில் இருந்திருந்தால் 'விடுதலை'யைத் தலையிலே தூக்கி


வைத் துக் கொண்டாடி இருக்க வேண்டும். கொண்டாடினார்களா?


நன்றி பாராட்டாத - எதிர்பார்ப்பே இல் லாத பெரியார் இயக்கத்தின் போராயுதமான அறிவாயுதமாம் விடுதலையை நன்றியுடன் தூக்கிப் பிடிப்பேர் - தாங்கி நிற்போர் இருக்கவே செய்கிறோம். நம்மை மானமும் அறிவும் உள்ள மனிதர்களாக வாழவைக்கப் பாடுபடும் எழுத்தாயுதமான விடுதலையை தொடர்ந்து முன்னெடுப்போம். அதன் பரவலில்தான் இனத்தின் எதிர்காலம் உள் ளது. அதன் வளர்ச்சிக்கு உதவிட வேண்டி யது அனைவரின் கடமை.


தனி மனிதர்கள் சேர்ந்ததே குடும்பம். குடும்பங்கள் இணைந்ததே சமுதாயம். சமுதாயம் வாழும் குறிப்பிட்ட நிலப்பகு தியே நாடு. தனி மனிதனிடம் ஏற்படும் மாற்றம் சமுதாயத்தின் போக்கை, நாட்டின் போக்கை மாற்றிக் கூடும். அந்த வகையில் தமிழர் சமுதாயத்தை, ஒடுக்கப்பட்ட மக்க ளின் வாழ்வில் ஒளியை ஏற்படுத்தியது 'விடு தலை'. அனைத்துத் துறைகளிலும் நாட்டின் போக்கை மாற்றி அமைத்தது 'விடுதலை'.


'விடுதலை'யை படிக்கத் தொடங்கினால் விடுதலையை தொடர்ந்து வாசிக்காமல் இருக்க முடியாது என்பதே உண்மை. ஒரு நாள் விடுதலையைப் படிக்காமல் இருக்கும் சூழல் ஏற்பட்டு விட்டால், எதையோ இழந் தது போன்ற உணர்வு விடுதலை வாசகர் களுக்கு!


தமிழினத்தை - திராவிடர் சமுதாயத்தை வாழ வைத்த... வாழ வைத்துக் கொண்டி ருக்கும் உரிமை முரசாம் விடுதலையை வாழ வைப்பது, வளர்த்தெடுப்பது நமது சமுதாயக் கடமையன்றோ! தெரிந்தவர் களுக்கெல்லாம் விடுதலையை கொண்டு போய் சேர்போம் இப்போது! இலட்சம் பேர்களைக் கடந்து நிரந்தர வாசகர்களாக் குவோம் விடுதலைக்கு! எப்போதும் தேவை விடுதலையின் சேவை! விடு தலையின் விளைச்சலில் பயன்பெறட்டும். பயன் பெற்று உயரட்டும் தமிழினம்!


பெரியாரியலே வெல்லும்!


விடுதலையே அதனைச் சொல்லும்!


No comments:

Post a Comment