புதுவை முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரி, ஜூன் 15 கரோனாவைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் படும். மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டியது அர சின் கடமை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்-அமைச் சர் நாராயணசாமி நேற்று சட்டசபை வளாகத்தில் செய் தியாளர்களுக்கு பேட்டிய ளித்தார். அவர் கூறிய தாவது:-
புதுவை மாநிலத்தில் தற்போது கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் பணிக்காக டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் கூடு தலாக தேவைப்படுகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கலந்து பேசி ஒப்பந்த அடிப் படையில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களை நியமிக்க உள் ளேன். இதுதொடர்பான கோப்பு ஏற்கனவே தயாராக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து டாக்டர்களை பெற வும் அரசு நடவடிக்கை எடுக் கும். புதுவை மாநிலத்தை பொறுத்தவரை தேவையான மருந்துகள், மருத்துவ பரிசோதனைகள் செய்ய தேவையான உபகரணங்கள் வாங்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை யில் குழு அமைக்கப்பட் டுள்ளது. தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.கிட்டுகள் வாங்க வேண்டிய நிலையில் உள் ளோம்.
இதுவரை 10 ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய் யப்பட்டுள்ளது. இன்னும் அதிக பரிசோதனைகள் செய்தால் தான் கரோனா நோயாளிகளை கண்டறிய முடியும். எனவே முதல்-அமைச்சரின் கரோனா நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்க உள்ளோம். மக்களின் உயிர் மிக முக்கியம். அதை காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு தேவையான நட வடிக்கைகளை அரசு எடுக் கும். பொதுமக்கள் இதனை பொறுத்துக் கொள்ள வேண் டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், மலைவாழ் மக்களின் உரிமையை காக்க மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
No comments:
Post a Comment