இரா.முத்தரசன் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 14- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:
கரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக சென்னை மாநக ரத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் பாதித்து வருகின்றனர். உயிர்ப் பலி எண்ணிக்கையும் அதிகரித்து மக்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கி உள் ளது.
வீடு, வீடாக சென்று அனைவருக்கும், மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, உரிய சிகிச்சை அளித்து, மக்களை காக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல், சளி தொந்தரவு போன்றவை கரோனாவிற் கான அறிகுறியாகும். இத்த கையோர்கள், அலட்சியப் படுத்தாமல், உடன் மருத்து வரை அணுக வேண்டும் என அரசு தொடக்கம் முதல் தொடர்ந்து பொதுமக்க ளுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தது.
தற்போது அரசின் வேண்டுகோளுக்கு முரணாக மாநகராட்சியின் உத்தரவு அமைந்துள்ளது.
ஒருவர் கரோனா மருத் துவப் பரிசோதனை மேற் கொண்டால் அவரும் அவ ரது குடும்பத்தாரும் 14 நாட்கள் தனிமைபடுத்தப்படு வார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருப் பது அச்சமூட்டுவதாக உள் ளது. யாரும் மருத்துவம னைக்கு வரவேண்டாம் என்று உத்தரவிட்டது போன்று உள்ளது. மாநகராட்சி இத் தகைய உத்தரவை திரும்பப் பெற வேண்டும். அனைவருக் கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, கரோனாவை கட்டுக்குள் கொண்டு வரவும், மக்களைக் காப்பாற்றவும் அரசும், மாநகர நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டுமாய், இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறோம்.
இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment