அமெரிக்காவில் மீண்டும் கருப்பரினத்தவர் சுட்டுக் கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 14, 2020

அமெரிக்காவில் மீண்டும் கருப்பரினத்தவர் சுட்டுக் கொலை

அட்லாண்டா, ஜூன் 14- அமெரிக் காவில் ஜார்ஜ் பிளாய்ட் காவல்துறையினரால் கொல்லப்பட்டதையடுத்து எழுந்த போராட்டங்கள் அடங்காத நிலையில் மேலும் ஒரு கருப்பரினத்தைச் சேர்ந்த நபர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது கடும் பதற்றத்தை அதிகப் படுத்தியுள்ளது.


இதனையடுத்து அட்லாண்டா காவல்துறை தலைமைப் பதவியில் உள்ள அதிகாரி எரிகா ஷீல்ட்ஸ் பதவி விலகினார்.


27 வயது ரேய்ஷர்ட் புரூக்ஸ் என்ற கருப்பரினத் தைச் சேர்ந்த நபரைக் கைது செய்யும் போது காவல்துறையினரிடமிருந்து டேசர் துப் பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடியதாகவும் இதனையடுத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக வும் தகவல்கள் தெரிவிக்கின் றன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment