இங்கிலாந்தில் கரோனா பாதிப்பால் தெற்காசிய மக்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 20, 2020

இங்கிலாந்தில் கரோனா பாதிப்பால் தெற்காசிய மக்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்

அதிர்ச்சிகர ஆய்வுத் தகவல்



லண்டன்,ஜூன் 20, இங்கிலாந்தில் வசிக்கும் தெற்காசிய மக்கள் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஒரு புதிய ஆய்வு அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 நாடுகள் தெற்காசிய நாடுகளாகும்.


எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையில் நடந்த ஆய்வு ஒன்றில்  பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது சுகாதார அமைப்புகள் மற்றும் 260 மருத்துவமனைகள் உட்பட இங்கிலாந்து முழுவதும் இருபத்தேழு நிறுவனங்கள் பங்கு பெற்றன.


இந்த ஆய்வில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொரு 1,000 வெள்ளை மக்களில் 290 பேர் இறக்கின்றனர். அதே சமயம் ஒவ்வொரு 1,000 தெற்காசிய மக்களில் 350 பேர் இறக்கின்றனர். வெள்ளை இனத்த வரோடு ஒப்பிடும்போது, மருத்துவமனையில் உள்ள தெற்காசிய இனத்தவரின் மரண விகிதமும், தொற்று விகிதமும் சற்று அதிகமாகவே இருக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்து உள்ளது.


இங்கிலாந்தில் வசிக்கும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களில் அனுமதிக்கபட்ட நோயாளிகளில் சுமார் 40 சதவீதம்  பேர் டைப் 1 அல்லது டைப் 2 நீரிழிவு நோயைக் கொண்டிருந்தனர். தடுப்பூசி யார் யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தீர்மானிக்கும் போது இனத்தையும் இப்போது வயதையும் கருத்தில் கொள்ளவேண்டி இருக்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


இது குறித்து எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஈவன் ஹாரிசன் கூறியதாவது:-


தெற்காசிய இனத்தவர்களில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட கரோனா நோயாளிகளில் சுமார் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கின்றது. இதனாலேயே ஆசிய இனத்தவர்களின் கரோனா தொற்றும், இறப்பு வீதமும் அதிகரிக்கின்றது.


எனவே தெற்காசிய மக்கள் அதாவது சிறுபான்மையின மக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் கரோனா வைரசிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக முகக்கவசம் அணிதல் மிகமிக அவசியம் என அவர் கூறினார்.


நோயாளியுடன் உறவினர் இருப்பது கட்டாயம்


சென்னை, ஜூன் 20 அரசு மருத்துவமனை கரோனா வார்டுகளில், நோயாளிகளுடன், உறவினர்களும் கட்டாயம் இருக்க வேண்டும்' என்ற, மருத்துவமனைகள் நிர்வாகத்தின் முடிவால், பொதுமக்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.


சென்னையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு, 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சைஇவர்களில், முதல்நிலை ஆபத்தில்லாத, 5,000க்கும் மேற்பட்டோர் வீடுகளிலும், 8,000க்கும் மேற்பட்டோர், கரோனா சிறப்பு மய்யங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.மீதமுள்ள, 4,000த்துக்கும் மேற்பட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.


ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்துரார் அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா வார்டுகளில், காவலாளிகள் நியமிக்கப்படவில்லை. இதனால், சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகள் இயல்பாக வெளியே வந்து செல்கின்றனர். மேலும், 50க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் தப்பிஉள்ளனர். இந்நிலையில், கரோனா நோயாளிகளுடன், உறவினர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும் என, ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. உறவினர் இல்லாத நோயாளிகளை, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். ஆலோசனை இதே நிலை, மற்ற அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுடன் உறவினர்களும் இருக்க வேண்டும் என, மருத்துவமனைகள் நிர்வாகத்தின் முடிவால், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


No comments:

Post a Comment