ஆவடி, ஜூன் 25 ஆவடி மாவட்டக் கழகம் சார்பில் 7-.6-.2020 அன்று நடைபெற்ற காணொலிக் கலந் துரையாடலில் ‘விடுதலையின் விளைச்சல் விழா’ கொண்டாடப் பட வேண்டும் என்று போடப்பட்ட தீர்மானத்தின்படி, விடுதலையின் 86_ஆம் பிறந்த நாளையொட்டி, ஆவடி மாவட்டத்தில் விடுதலையின் விளைச்சல் விழா 21.-6.-2020, ஞாயிற் றுக்கிழமை மாலை 5 மணியளவில் மாவட்டத் தலைவர் பா.தென்னரசு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. பூவிருந்தவல்லி பகுதியின் தலைவர் பெரியார் மாணாக்கன் அனைவரையும் வரவேற்றுப் பேசி னார். அதைத் தொடர்ந்து மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் நிகழ்வைத் தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி நிகழ்வை வாழ்த்திப் பேசினார். மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் இணைப்புரை வழங்கினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கருத்துரையாற் றினார்.
கழகத் துணைத்தலைவர் தமது உரையில், 'விடுதலை'யின் வரலாற் றுச் சுவடுகளை பார்வையாளர்களின் உள்ளங்களில் பதிய வைத்தார். “விடுதலை இந்த தமிழ்ச் சமூகத்தில் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத் தியது. அதில் சமூக மாற்றம் மட்டுமல்ல, அரசியல் மாற்றமும் சேர்ந்தே உள்ளது’’ என்று குறிப்பிட் டார்.
கலந்துகொண்டவர்கள்: நிகழ் வில் மாவட்டச் செயலாளர் க.இளவரசன், ப.தண்டபாணி, தஞ்சை குணசேகரன், கோரா ஹேமா மாலினி, சாமிநாதன், பொன்னேரி செல்வி, அனகை ஆறுமுகம், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, இளையராஜா, அரியலூர் விஜய், வெங்கடேசன், ஸ்டான்லி, வை.கலையரசன், சோமசுந்தரம், பாலமுரளி (எ) இனமாறன், ஸ்டீபன், அரும்பாக்கம் தாமோதரன், பூவை மணிமாறன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் அமைப்பாளர் பகுத்தறிவு, மாவட்ட இளைஞரணிச் செய லாளர் சோபன்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். இணையத் தொடர்பு சரியாக இல்லாததால் மாவட்டத் தலைவர் பா. தென்னரசு நிகழ்வில் கலந்துகொள்ள இயல வில்லை.
விடுதலை வளர்ச்சி நிதி அறிவித்தவர்கள் : கடந்த 7-.6.-2020 அன்று நடைபெற்ற ஆவடி மாவட் டக் காணொலிக் கலந்துரையாடலில் விடுதலை வளர்ச்சி நிதி அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளபடி, மாவட்டத்தின் சார்பில் மொத்தம் ரூ.30,000 விடுதலை வளர்ச்சி நிதியை கழகத் தோழர்கள் அளிப்பதாக அறிவித்துள்ளனர். (பட்டியல் பக்கம் 2இல் காண்க)
ஆவடி மாவட்டத்தில் விடுதலை வளர்ச்சி நிதி ஏற்கெனவே அறிவித்து கொடுத்தவர்கள் க.கலைமணி ரூ.500, இசையின்பன், பசும்பொன் செந்தில் குமாரி குடும்பம் சார்பாக ரூ. 2,000 கொடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக மாவட்ட இளை ஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment