சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 25, 2020

சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை

சென்னை,ஜூன்25, சென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப் படுத்த கமாண்டோ படை களமிறக் கப்பட்டுள்ளது. தலைநகரில் நாளுக்கு நாள் கரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் வருகிறது. இந் நிலையில் நேற்று ஒரே நாளில் 1654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதுவரை சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,814ஆக அதிகரித்துள் ளது. இராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் குறையவில்லை. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், அது அத்தனையும் பலன ளிக்கவில்லை. இதனால் தற்போது கமாண்டோ படை களமிறக்கப்பட் டுள்ளது.


மக்கள் நெருக்கம் மிகுந்த கொருக்குப்பேட்டை, புது வண் ணாரப்பேட்டை, இராயபுரம் உள் ளிட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்திய கமாண்டோ படையினர், வெளியே நடமாடிய மக்களை எச்சரித்து அனுப்பினர்.


சென்னை மாநகரில் வேகமாக பரவி வரும் கரோனா தொற்றுக்கு இராயபுரம் மண்டலத்தில் மட்டும் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 6,607-ஆக அதிகரித்துள்ளது. தண்டையார் பேட்டை மண்டலத்தில் 5,355 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வடசென்னையில் கரோனா பரவல் அதிகமாகி இருப்பதால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவ தற்காக கமாண்டோ படை தற்போது களமிறக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment