காணொலியில் நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட மகளிரணிக் கருத்தரங்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 18, 2020

காணொலியில் நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட மகளிரணிக் கருத்தரங்கம்!


திருப்பத்தூர்,ஜூன்18, திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி சார்பில் கடந்த 14.6.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் காணொலி வழியாக மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு  ஒன்றிய துணைத் தலைவர் சுமதி வரவேற்புரையாற்றினார். மக ளிரணியின் செயல்பாடுகள்  நிறை வாக உள்ளது என்றும், மேலும் சிறப் பாக செயல்படும் வழிமுறைகளையும் விரிவாக எடுத்துச் சொல்லி அனை வரையும் பாராட்டிய திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன்  நிகழ்வை தொடக்கி வைத்தார்.


"பெரியாரும் பெண்ணுரிமையும்" என்ற தலைப்பில் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இந்திரா காந்தி உரையாற்றினார்.  பெரியாரால் பெண்கள் பெற்ற உரிமையை தன்  சொந்த வாழ்வோடும் இணைத்து சிறப்பாக பேசினார்.


மாநில மகளிரணி பொருளாளர் எ.அகிலா அவர்கள் "இந்த பெருந் தொற்று காலகட்டங்களில் எப்படி நாம் நம்மை தற்காத்துக் கொள்வது என்றும் மனதளவில் நாம் வலிமை யோடு இருப்பது எப்படி" என்றும் விரிவாக எடுத்துரைத்தார்.


இந்த நிகழ்வை  ஏற்பாடு செய்த மாநில மகளிரணி அமைப்பாளர் குடியாத்தம் ந.தேன்மொழி   "திரா விடர் கழகத்தில் மகளிர் ஏன் இணைய வேண்டும்?" என்று சிறப்பாக சொல்லியும் மற்றவர்களிடம் எளிய முறையில் எப்படி கொள்கையை எடுத்துச் சொல்லுவது என்றும் விளக்கிப் பேசினார்.  மாநில மகளி ரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி விடுதலையின் சிறப்பை எடுத்துரைத்து "விடுதலை 86" என்ற தலைப்பில் ஆசிரியரின் அறிக்கை களை சுட்டிக்காட்டி, சாதனையை எடுத்துக்காட்டி பேசினார்.


கழகத் துணைப் பொதுச் செய லாளர் ச.இன்பக்கனி  கருத்தரங்க தலைமை வகித்து நிகழ்வை சிறப்பாக தொகுத்து அனைவரையும் பாராட்டி மேலும் பல ஆலோசனைகளை தந்தார்.


கழகத் தோழர்கள் மகளிரின் பணிகளை பகிர்ந்துகொண்டு பெரு மளவில் அவர்களை இயக்க நிகழ்வில் இணைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பொதுக்குழு உறுப்பினர் ஜான்சிராணி நன்றி கூறினார். நிகழ்வை திருப்பத்தூர் மாவட்ட மகளிரணித் தலைவர் ம.கவிதா ஒருங்கிணைத்து நடத்தினார். அமைப் புச் செயலாளர் ஊமை ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்  அண்ணா.சரவணன் கருத் துரையாற்றினர்.


மகளிரணி செயலாளர் இ.வெண் ணிலா, சபரிதா, மணிமொழி, முருகம் மாள், சுதா, மத்தூர் பிரியா, கருங் காலிப்பட்டி சங்கீதா, கருங் காலிப் பட்டி சத்யா ராமஜெயம், கீதா, கனிமொழி, ஓவியா, காயத்ரி, ஸ்வேதா, மங்களாதேவி, ஓசூர் மாவட்ட மக ளிரணித் தலைவர் செல்வி, சங்கீதா, மாவட்டச் செயலாளர் வி.ஜி. இளங்கோ, மாவட்ட துணைச் செய லாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன், மண்டல இளைஞரணி ஆறுமுகம், ஒன்றியத் தலைவர் முரு கேசன், மாவட்ட இணைச்செயலாளர் அரங்க.ரவி, மாடர்ன் ரேஷனலிஸ்ட் வாசகர் வட்டம் பழனி, வெங்கடேசன்,  ஜானகிராமன், ஞானசேகரன், நிலவன், அகரன், அ.செ.செல்வம் பொதுக்குழு உறுப்பினர், காரல் மார்க்ஸ், இசையின்பன்  ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.


வேலூர் மாவட்டத் தலைவர் சிவகுமார் அவர்களும் வாழ்வி ணையர் லதா மற்றும் மகன் சங்கநிதி ஆகி யோர் சிறப்பாக காணொலி இணைப்பை வழங்கி ஒருங்கிணைத் தார்கள்.


No comments:

Post a Comment