புதுச்சேரியில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்திப் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 18, 2020

புதுச்சேரியில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்திப் போராட்டம்


புதுச்சேரி,ஜூன்18, அகில இந்திய மக்கள் மேடையின் புதுவை மாநிலக் கிளையின் சார்பாக கரானா கால மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18.6.2020) காலை 10 மணியளவில் புதுவை அண்ணாசிலை சந்திப்பில் மேடையின் தேசியப் பிரச்சாரகர் இரா.மங்கையர்செல்வன் தலைமையில் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது.


கரோனா நோய்த் தொற்று  பேரிடர் காலத்தில் சாமான்ய மக்களின்  நிலையை கரிசனத்தோடு அணுக, கீழ்க்காணும் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும்.


புதுவை போராட்டக்கள வரலாற்றில் மைல்கல் உரிமையான எட்டுமணி நேர வேலையை பறிக்கும் உத்தரவை ரத்து செய்யவேண்டும். உலகச் சந்தையில் கச்சா எண்ணை வரலாறு காணாத விலைவீழ்ச்சியை சந்தித்த நிலையில் பெட்ரோல், டீசல்,விலையை அன்றாடம் உயர்த்திக் கொண்டிருக்கும் அநியாயத்தைக் கைவிட வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கும் மக்களிடம் மின்சாரம், சுங்க கட்டணம், ஜிஎஸ்டி என்று சகலத்தையும் உயர்த்தி பணம் பறிக்கும் அவலத்தை நிறுத்த வேண்டும். எந்த நியாயத்திற்கும் கட்டுப்படாமல் கல்விக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.


ஆன்லைன் வகுப்பு எனும் குழந்தைகளின் மீதான உளவியல் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். அடிப்படைத் தேவையான உணவிற்கே திண்டாடும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வயிற்றுப்பாட்டுக்கு உதவும் விலை மலிவான ‘ஜனதா’ சாப் பாட்டுக்கு மாநிலம் முழுதும் ஏற்பாடு செய்யவேண்டும். பெருந் துயர சூழல்களை கணக்கில் கொண்டு நிவாரணத் தொகையாக குடும்பம் ஒன்றுக்கு மாதந்தோறும் ரூ. 10000/- வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.


No comments:

Post a Comment