மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைகிறதா?
இம்பால்,ஜூன்18, மணிப்பூரில் 3 பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 11 பேர் பதவி விலகியுள்ளதால் அங்கு பிரேன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மணிப்பூரில், கடந்த 2017 தேர்தலின் போது 28 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் இருந்தது. ஆனால், 21 இடங்களை மட்டுமே தன் வசம் வைத்திருந்த பாஜக, தலா 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சையுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில், பாஜகவைச்சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் நேற்று பதவி விலகினர். இதையடுத்து, அதன் கூட்டணிக் கட்சிகளான தேசிய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், சுயேச்சை உறுப்பினர் ஒருவர் என 3 பாஜக உறுப் பினர்களை சேர்த்து மொத்தம் 9 பேரும் பாஜக அரசுக்கு தெரி வித்து, ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால், மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க.விலிருந்து விலகிய சட்டமன்ற உறுப் பினர்கள் மூவரும் தங்கள் பதவியிலிருந்து விலகி, காங்கிரசில் இணைந்தனர். தற்போது, பாஜக.வுக்கு அளித்த ஆதரவை திரும் பப் பெற்ற மற்ற 6 பேரையும் சேர்த்தால், காங்கிரசின் பலம் 34 உயர்கிறது. இதனால், ஆட்சியை அமைப்பதற்கான பெரும் பான்மை அது பெற்றுள்ளதால், அடுத்த ஆட்சி அமைக்க அக்கட்சி தீவிரமாக முயற்சிக்கும் என தெரிகிறது.
பேரவையில் கட்சிகள் பலம்
மொத்த இடங்கள் - 60 - காங்கிரஸ் - 28, பாஜக - 21, நாகா மக்கள் முன்னணி - 4, தேசிய மக்கள் கட்சி - 4, திரிணாமுல் காங்கிரஸ் - 1, லோக் ஜனசக்தி - 1, சுயேச்சை - 1
No comments:
Post a Comment