வீட்டுக்கு முன்னின்று அறவழியில் முழக்கமிடுவீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
கரோனா தொற்று நாளும் அதிகமாகப் பரவி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் சூழலில் - பல லட்சம் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்துவது உகந்த தல்ல - இதில் பிடிவாதம் காட்டுவது தமிழக அரசுக்கு உகந்ததல்ல என்பதை வலியுறுத் தும் வகையில், நாளை (10.6.2020) காலை 10 மணிக்கு அறவழி முழக்கம் எழுப்புவீர் கழகத் தோழர்களே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார்.
அறிக்கை வருமாறு:
கரோனா தொற்று தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மிக அதிவேகப் பாய்ச்சலில் உள்ளது. நாளும் விஷம்போல ஏறிக்கொண்டே உள்ள நிலைமை, மக்களை அச்சத்தில் அலைக்கழிக்க வைத்துள்ள நிலை. இந்தியாவிலும் நாளும் அதிகமாகி, உலகில் 5 ஆவது இடம் என்ற நிலையில் உள்ளது.
‘‘இது பேரிடர் காலம்; கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமியுடன் யுத்தம் நடத்துகிறோம்'' என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, நான்கு ஊரடங்குகள் முடிந்து அய்ந்தாவது ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நாளும் அதி கரிக்கும் தொற்றும், உயிர்ப் பலியும் சோகத்தைப் பெருக்கும் வேதனையாகவே நீடிக்கிறது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை இவ்வாண்டு 9 லட்சம் மாணவர்கள் மார்ச் மாதம் எழுதியிருக்க வேண்டும். அப்போதே கரோனா தொற்று தொடக்க நிலையில் இருந்ததால், தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வைத்த காரணம்!
கரோனா தொற்று கீழிறக்க நிலையை அடைந்து, விரைவில் முடிவுக்கு வரும் அறிகுறி சமீபத்தில் இல்லை என்பதை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்குரைஞர், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தள்ளிப் போட வேண்டும் என்ற வழக்கின்மீது வாதிட்ட பொழுது, ‘‘வரும் காலங்களில் மேலும் மேலும் பெருக வாய்ப்புள்ளது. அதனால், இப்போதே நடத்த முற்படுகிறோம்'' என்ற ஒரு விசித்திரமான வாதத்தை உயர்நீதிமன்றத்தில் நேற்று கூறி யுள்ளார்.
மாணவர்களின் உயிரைவிட
தேர்வு முக்கியமா?
வழக்கை விசாரித்த மாண்பமை உயர்நீதி மன்ற நீதிபதிகள், ‘‘மாணவர்கள் உயிரைவிட உயர்கல்வியா இந்தத் தருணத்தில் முக்கியம்?'' என்ற ஒரு கேள்வியை அரசுக்குப் பொறித் தட்டும் அளவிற்குக் கேட்டுள்ளனர்.
மனிதநேயம் பொங்கும் நியாயமான, பெற் றோர்கள், பொதுநலவாதிகளின் மனங்களின் குரல் ஓசையாகும் அது!
தமிழக அரசு வழக்குரைஞர் கூறிய மேற் கண்ட பதில், மனிதாபிமானத்திற்கு எதிரானது.
ஏற்கெனவே நாம் பல வாரங்களுக்கு முன்பே எழுதினோம்; அரசுக்குச் சுட்டிக்காட்டி வேண்டுகோள் வைத்தோம்.
மகாராட்டிர மாநிலத்தில் அவசரச் சட்டம் நிறைவேற்றி, அத்தனை பேரும் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி (All Pass) என்று செய்துள்ள ஏற்பாட்டைச் சுட்டிக் காட்டி, கரோனா தொற்றுப் பெருக்கத்தில், தமிழ்நாடு இரண்டாம் நிலையில் உள்ளபோது, இப்படி செய்வது எவ்வகையிலும் தவறாகாது.
தெலங்கானாவில்
தேர்வு ரத்து
அசாதாரண சூழ்நிலை - அசாதாரண நோய்த் தொற்று - அதற்கு ஏற்ப ஒரு அசா தாரண பரிகாரம் - ஏற்பாடு என்பது எவராலும் மறுக்க முடியாது. நியாயத்தின்பாற்பட்டதே ஆகும் அது.
நான்கு லட்சம் மாணவர்கள் எழுதும் - நம்மைவிட குறைவான பாதிப்புக்கு ஆளான அண்டையில் உள்ள தெலங்கானா மாநிலத்தில் - 10 ஆம் வகுப்பில் அத்தனை பேரும் தேர்ச்சி என்று முடிவெடுத்து அறிவிக்கவில்லையா?
அதைவிட அதிகமான அளவிற்கு, 9 லட்சம் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுது கின்ற காலகட்டத்தில், தேர்வை ஏன் கைவிடக் கூடாது?
மனிதாபிமானத்தோடு உயிர்களைப் பாதுகாக்கும் பொறுப்புணர்ச்சியோடு தமிழக அரசு, குறிப்பாக முதலமைச்சர், கல்வி அமைச் சர், அமைச்சர்கள் ஆழமாக சிந்திக்கவேண்டும்.
90 சதவிகித மாணவர்கள்
வெற்றி பெறத்தானே போகிறார்கள்!
தேர்வு எழுதவிருக்கும் 9 லட்சம் மாணவர் களில் வழமையாக பெரும்பாலானோர் தேர் வில் வெற்றி பெறுவர். முந்தைய ஆண்டுகளில் 85, 90 விழுக்காடு வெற்றி பெற்றனர் என்பது செய்தி.
இதில் தோல்வி அடைபவர்கள் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம்தான் அதிகபட்சமாக. அவர் களுக்கும் ‘ஆல் பாஸ்' என்று கிறீறீ றிணீss கொடுப் பதால் என்ன குடி மூழ்கிப் போகும்? எந்த வகையில் கல்வித் தரம் கெட்டுப் போகும்?
மூளையும், இதயமும் இணைந்து முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது. வெறும் சட்டம், வீம்பு, வீண்பிடிவாதம் தேவையில்லை. இதை கவுரவப் பிரச்சினையாகக் கருதக் கூடாது தமிழக அரசு.
ஜனநாயக ரீதியில் வேறு வழியில்லாததால், தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகளின் ஒருமித்த எதிர்ப்பும், பெற்றோர் உணர்வும் பல வகைகளிலும் வெளிப்பட்டு வருகிறது, அதனை அலட்சியப்படுத்தக் கூடாது.
கரோனாவால் உயிருக்கே அச்சுறுத்தல் எனும் ஒரு அசாதாரண சூழ்நிலையில், எதிர்க் கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர் கள், நேற்று முக்கிய தோழமைக் கட்சிகளுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடிய பின், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை இவ்வாண்டு ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சி கள் சார்பில் நாளை (10.6.2020) காலை 10 மணிக்கு - கடந்த 7.5.2020 ஆம் தேதி டாஸ்மாக்கைத் திறக்கக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட அறப்போராட்டம்போல, அவரவர் இல்லத்தின் முன்பு அய்ந்து பேர் கூடி, தனி மனித இடை வெளியைப் பின்பற்றியும், கரோனா தடுப்பு உபகரணங்களை அணிந்து கொண்டும், முழக் கங்களை எழுப்புமாறு கழகத் தோழர்கள், ஆர்வலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கட்டும் - தேவையற்ற உயிரிழப்பு இதனால் என்ற பழியை ஏற்றுக் கறையாக ஆக்கிக் கொள்ள வேண்டாம்!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
9.6.2020
கடைசிச் செய்தி!
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து
அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் அறிவிப்பை வரவேற்கிறோம்: தமிழர் தலைவர் கருத்து
கரோனா நோய் கடுமையாகப் பரவிவரும் ஓர் அசாதாரண சூழலில், இப்பொழுது பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தவேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
நாளை இதனை வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் தி.மு.க. தலைமையிலான தோழமைக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஒரு சூழலில் -
இன்று (9.6.2020) மதியம் 12.30 மணியளவில் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள், நடக்கவிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வு அறவே ரத்து செய்யப்படுவதாகவும், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் (கிறீறீ றிணீss), 11 ஆம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவித்திருப்பது - வரவேற்கத்தக்கது!
இத்தகு முடிவை அரசு எடுக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திய தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும், தலைவர்களுக்கும், கல்வியாளர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல, புதுச்சேரி மாநிலத்திலும் 10 ஆம் வகுப்புத் தேர்வு ரத்து என்பதும் வரவேற்கத்தக்கது; புதுச்சேரி முதலமைச்சருக்கு நமது பாராட்டுகள்!
நாளை நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்படுகிறது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.6.2020
No comments:
Post a Comment