செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 10, 2020

செய்தித் துளிகள்....

* சென்னை, காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கை ஒரு வாரத்திற்குப் பிறப்பிக்க அரசு அதிகாரிகள் பரிந்துரை.


* பீகாரில் பா.ஜ.க. கூட்டணி அவநம்பிக்கை கூட்டணியாக மாறிவிட்டது என்கிறார் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ்.


* ஊரடங்கு காலத்தில் குழந்தைக் கடத்தல் அதிகரித்து விட்டதாக உச்சநீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழக்கு.


* ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை மூடப்படும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் உல்ரிக் நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.


* கரோனா இல்லாத நாடானது நியூசிலாந்து.


* அரசு - தேர்வுத் துறை இயக்குநர் கரோனாவால் பாதிப்பு.


* மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்திய கோவை சி.பி.எஸ்.இ. பள்ளி, அரசு அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்டது.


* புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு.


* அறிகுறியற்ற கரோனாவால் ஆபத்து இல்லை - இது உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பு.


* சீனாவில் கரோனா 2019 ஆகஸ்டிலேயே தொடங்கிவிட்டது.


* கரோனா - ஆம்புலன்ஸ் சேவைக்கு 044-40067 1008.


No comments:

Post a Comment