உ.பி. மாநில பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 16, 2020

உ.பி. மாநில பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்

மயங்கி விழுந்து இறந்தவரின் உடலைக் குப்பை வண்டியில் ஏற்றுவதா?


லக்னோ, ஜூன் 16- உத்தரப்பிரதேச மாநிலத் தின் லக்னோ மாவட்டம் பல்ராம்பூர் பகுதியில் சாலையோரத்தில் மயங்கியபடி உயிரிழந்த நபரின் உடலை காவல்துறையினர் முன்னிலையில் நகராட்சி ஊழியர் கள் குப்பை வண்டியில் தூக்கிப் போட்டு கொண்டு சென்றனர்.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் முகமது அன்வர் என்பவர் அரசு அலுவலகத்துக்கு சென்றபோது சாலையில் மயங்கி விழுந்து, உயிரிழந்தார். இதையடுத்து ஆம்புலன் ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர் இறந்தவரின் உடலை தொடுவதற்கு பயந்துகொண்டு அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர் வந்த நகராட்சி ஊழியர்கள் சாலையோரத்தில் கிடந்த முகமது அன்வரின் உடலை குப்பை வண் டியில் ஏற்றிச் சென்றனர். அப்போது அம் மாநில காவல்துறையினரும் இருந்தனர்.


இந்நிகழ்வின் காட்சிப்பதிவு சமூக ஊடகங்கலில் பரவிதையடுத்து, காட்சிப் பதிவில் காணப்பட்ட காவல்துறையினர் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர்.


இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர் பாக ஊடகச் செய்திகள் மூலம் அறிந்த சிறுபான்மையினர் நல ஆணையமும், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உத்தரப் பிரதேச அரசு, பல்ராம்பூர் நகராட்சி ஆணை யர்  மற்றும் உத்தரப்பிரதேச மாநில காவல் துறை டிஜிபி ஆகியோருக்கு கூட்டாக விளக் கம் அளிக்கக்கோரி தாக்கீது அனுப்பியுள்ளன.


அந்த தாக்கீதில், சாலையில் விழுந்து உயிரிழந்தவரின் உடலை குப்பை வண்டி யில் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சி யளிக்கிறது. அரசு ஊழியர்களிடமிருந்து இதனை துளியளவும் எதிர்பார்க்கவில்லை. இது வெட்கக்கேடானது. காவல்துறையி னரும், அரசு ஊழியர்களும் நடந்து கொண்ட விதம் நாகரிகமற்ற செயல். இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில காவல்துறை டிஜிபி, பல்ராம்பூர் நகராட்சி ஆணையர், உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் என அனைவரும் 4 வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக் கல் செய்யவேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.


அதேபோல, சிறுபான்மையினர் நல ஆணையம் விடுத்துள்ள தாக்கீதில், சிறு பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை குப்பை வண்டியில் நகராட்சி ஊழியர்கள் ஏற்றிச் சென்றதும், அதனை கைக்கட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையினரின் செயலும் மனித குலத்துக்கே அவ மானம். வெட்ககேடான, மனித தன்மை யற்றதின் உச்சகட்டம் என கண்டனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக மாவட்ட நிர்வா கமும், நகராட்சி ஆணையரும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.


No comments:

Post a Comment