11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்குத் தடை தமிழகப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 16, 2020

11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்குத் தடை தமிழகப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை, ஜூன் 15- முதன்மை கல்வி அலுவலர்களிடம் அனு மதி பெறாமல் 11ஆம் வகுப் பில் புதிய பாடத் தொகுப்பிற்கு மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது என தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.


அதன்படி 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்திருக்கிறது பள்ளிக் கல்வித்துறை. இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள் ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 10ஆம் வகுப் பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் அரசு தற்போது இந்த உத்த ரவை பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் தற்போது 10ஆம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட் டுள்ள நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பெரும்பா லான பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. மாணவர் பெற்றோரிடம் இது தொடர் பாக பள்ளி நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு புகார் வந்துள்ளது. 10ஆம் வகுப்புக்கு இன்னும் தேர்வு முடிவு வெளியிடப் படாத நிலையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று தற்போது பள்ளிக் கல்வித்துறை ஒரு தடை உத்தரவை பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


11ஆம் வகுப்பில் ஏற்கெ னவே அமலில் இருந்து வரக் கூடிய 600 மதிப்பெண் பாடத் தொகுப்புக்கு பதிலாக இந்த ஆண்டு முதல் 500 மதிப் பெண்கள் கொண்ட புதிய பாடத்தொகுப்பானது அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்தொகுப் பின்கீழ் மாணவர் சேர்க் கையை முன் அனுமதி பெறா மல் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டும் பள்ளி கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் பள்ளிக்கல் வித்துறை வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment