உப்பிலிருந்து கிருமிநாசினி தயாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 13, 2020

உப்பிலிருந்து கிருமிநாசினி தயாரிப்பு

காரைக்குடி, ஜூன் 13- சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மத்திய மின்வேதியியல் ஆய் வகம் (சிக்ரி) உள்ளது. இங் குள்ள விஞ்ஞானிகள் உப்பில் இருந்து கிருமிநாசினியை உரு வாக்கி உள்ளனர்.


இதுகுறித்து இயக்குநர் டாக்டர் கலைச்செல்வி கூறி யதாவது: எங்கள் விஞ்ஞானி கள் குழுவினர் சாதாரண சோடியம் குளோரைடு உப்பை (வீட்டில் பயன்படுத் தப்படும் கல் உப்பு) பயன் படுத்தி, கரோனா வைரஸ் தடுப்புக்காக பயன்படுத்தக் கூடிய சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமிநாசினியை தயாரிக்கும் தொழில்நுட் பத்தை உருவாக்கி உள்ளனர். சோடியம் ஹைப்போ குளோ ரைட் பெரும்பாலும் வீதிகள், மருத்துவமனைகள் மற்றும் மக்கள் கூடும் சந்தைகளில் பயன்படுத்தப்படும் கிருமி நாசினியாகும்.


சோடியம் குளோரைடு உப்பை தண்ணீரில் கரைத்து எலக்ட்ரோ கெமிக்கல் முறை யில் மின்சாரத்தை பாய்ச்சும் போது சோடியம் ஹைப்போ குளோரைடாக மாறும். இந்த முறையில் ஒரு லிட்டர் கிருமி நாசினியை 3 ரூபாயில் உற் பத்தி செய்யலாம். குளோரின் வாயுவின் பயன்பாடு இல்லா ததால் மாசற்ற மற்றும் ஆபத்து இல்லாத ஆரோக்கியமான பணிச்சூழலை வழங்குகிறது. தொழில் முனைவோர்கள் மேலும் விவரங்களுக்கு 04565-241506 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ் வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment