தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை,ஜூன்19, தமிழக எதிர்க் கட்சித் தலைவர் தி.மு.க. தலைவரு மான தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனைகள் தமிழகம் முழு வதும் எல்லா மாவட்டங்களிலும் சீரான அளவில் பரவலான முறை யில், ஆரம்பத்திலிருந்தே இல்லாமல் போனதால் நமது மாநிலம் இப்போது கடுமையான சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கையைப் பட்டியலிட்டு வெளியிட வேண்டும் என்று கேட்டதற்குப் பிறகு, ஒரே யொரு முறை அந்தப் பட்டியலை வெளியிட்டார்கள்.
நோய்த் தொற்று இப்படி வேக மாக உயர்ந்துள்ள நிலையில், பரிசோதனைகளை அனைத்து மாவட்டங்களிலும் அதிகப்படுத் துவதுதான், உள்ளபடியே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவ தற்கான முதன்மையான முழுச் செயல் பாடாகும்.
வெளிநாடுகளில் இருந்து அர சாங்கத்தால் கோரப்பட்ட பரிசோ தனைக் கருவிகள் உரிய அளவில் வந்து சேராததுதான், சோதனை களின் எண்ணிக்கையை அதிகப் படுத்த முடியாமல், முடங்கி இருப்ப தற்குக் காரணம் என இன்றுவரை அறியப்படும் நிலையில், உள்நாட் டில் பரிசோதனைக் கருவிகளைத் தயாரிப்போர் வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்துகிறது. தங்களால் மாதந் தோறும் 14 கோடியே 60 லட்சம் பரிசோதனைக் கருவிகளைத் தயா ரிப்பதற்கான திறன் உள்ள நிலை யில், அய்.சி.எம்.ஆர் அமைப்பால் சரிபார்க்கப்பட்ட பரிசோதனைக் கருவிகள் பலவும் எவ்விதப் பயன் பாடுமின்றி, வெறுமனே இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித் துள்ளனர்.
விமானத்தில் வருவோர், ரெயில், பேருந்து நிலையப் பயணிகள் மட் டுமே பரிசோதனைக்கு உட்படுத் தப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட் டத்திலும் நாள்தோறும் தேவை யான அளவுக்குப் பரிசோதனைகள் செய்யக்கூடிய வகையில், தமிழக அரசு இன்னமும் கூடுதலாக சில லட்சம் பரிசோதனைக் கருவிகளைக் கொள்முதல் செய்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பரிசோதனை மய்யங்களுக்கு அனுப்பாமல் இருப் பது ஏன்? மாநிலம் முழுவதும் பரி சோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல் இருப்பது ஏன்?
தமிழகத்தில் மொத்தம் எத்தனை சோதனை மய்யங்கள் உள்ளன? ஒவ்வொன்றிலும் தினசரி எத்தனை சோதனைகளைக் கையாள முடியும்; இதுவரை சோதனை மய்யம் வாரி யாக மேற்கொள்ளப்பட்ட சோத னைகள் எத்தனை? மாவட்ட வாரி யாக பாதிப்பு எத்தனை கண்டுபிடிக் கப்பட்டுள்ளன? என்ற விவரங் களைப் பொதுக்களத்தில் உடனடி யாக முன்வைக்க வேண்டும். இவ் வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment