கோவிட் பாதிப்பிற்கு பிறகு இணையவழி கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 20, 2020

கோவிட் பாதிப்பிற்கு பிறகு இணையவழி கருத்தரங்கம்

சென்னை, ஜூன் 20- மலேசியன் பாமாயில் கவுன்சில் கோவிட் பாதிப்பிற்கு பிறகு பாமாயில் சந்தை என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் ஜூன் 11ஆம் தேதி நடை பெற்றது.இந்த நிகழ்ச்சியை எம்.பி.ஓ.சி டாக்டர் கல்யாணசுந்தரம் ஒருங்கி ணைத்தார். டாக்டர்கல்யாணசுந்தரம் கோவிட் பாதிப்பு பற்றிய ஒரு விளக்க காட்சியிடன் தனது பேச்சை துவக்கினார். கோவிட் உலக அளவில் பொருளா தாரம், சமூகம், நிதி கட்ட மைப்பில்  பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜனவரி மற்றும் மே 2020 இடையே சமையல் எண்ணெய் விலையை  ஒப்பீடு செய்தார். பாமாயில் ஏற்றுமதி பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியாவிற்கான ஏற்று மதி மிகவும் குறைந்து காணப்பட்டது. விளக்க காட்சியில் எங் கெல்லாம் பாமாயில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது பற்றி தகவல்கள் இடம் பெற்றது. 


தொழில்முனைவோர்களுக்கான விருதுகள்


விண்ணப்பங்கள் வரவேற்பு


சென்னை, ஜூன் 20- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து தொழில் முனைவோர்களின் புத்தாக்கமான கண்டு பிடிப்பு களுக்களை அங்கீகரிக்கும் ஒரு முயற்சியில், கவின்கேர் மற்றும் மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் ஆகியவை ஒன்று சேர்ந்து 9ஆவது சின்னிகிருஷணன் இனோவேஷன் விருதுகள் 2020க்கான விண்ணப்பங்களை இணைந்து வரவேற்கின்றன. 


கோவிட்-19 தொற்று நோயை கருத்தில்கொண்டு, ஒரு அர்ப்பணிப்பு கொண்ட வலைதளம் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை ஏற்பதன் மூலம் ஒரு தொடர்பு இல்லா நியமன செயல்முறையை கவின்கேர் மற்றும்  கூட்டாக சேர்ந்து நடைமுறைப்படுத்தியுள்ளது. 10ஆம் தேதி ஜுலை 2020 வரை நியமனங்களை இணையதளம் நேரடியாக விண்ணப்பிக் கலாம் அல்லது https://cavinkare.com/cavin-cares/csr/innovationawards/ என்பதிலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் மேலும் விவரங்க ளுக்கு 9789960398 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்கலாம்.


No comments:

Post a Comment