தஞ்சை மண்டலத்தில் நடைபெற்ற 'விடுதலையின் விளைச்சல்' சிறப்பு காணொலி கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 20, 2020

தஞ்சை மண்டலத்தில் நடைபெற்ற 'விடுதலையின் விளைச்சல்' சிறப்பு காணொலி கூட்டம்

58 ஆண்டுகாலம் ஆசிரியராக தமிழர் தலைவர் கின்னஸ் சாதனை


கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் பெருமிதம்



தஞ்சை, ஜூன் 20, தஞ்சை மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் விடுதலையின் விளைச்சல் சிறப்புக்கூட்டம் காணொலி வாயிலாக 7.6.2020 அன்று மாலை 6 மணியளவில்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர் மு.அய்யனார் தலைமையேற்று உரையாற்றினார். மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், காப்பாளர் வெ.ஜெயராமன், மாநில விவசாய அணிச் செயலாளர் இராயபுரம் இரா.கோ பால், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, பட்டுக் கோட்டை கழக மாவட்டத் தலைவர் பெ.வீரையன், மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், மன்னார்குடி கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கணேசன், அமைப்பாளர் மானமிகு ஆர்.எஸ்.அன்பழகன், கும்பகோணம் கழக மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மாவட்ட செயலாளர் சு.துரைராசு ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். தஞ்சை மண்டல செயலாளர் க.குருசாமி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.


கழக பொதுச்செயலாளர்


தஞ்சை இரா.ஜெயக்குமார்


திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் உரையில், அடிமை விடுதலை வேண்டுமா? விடுதலை பெற்ற விடுதலை வேண் டுமா? என்று தந்தை பெரியார் அவர்கள் எழுதிய அறிக்கையினை சுட்டிக்காட்டியும், விடுதலை கடந்து வந்த வரலாறு குறித்தும், இயக்க வளர்ச்சிக்கு விடுதலை ஏடு அதிக அளவில் மக்களிடம் சேர்ப்பது அவசியம், அதற்காக இயக்கத் தோழர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டு தொடக்கவுரையாற்றினார்.


கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன்


கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையில், கல்லூரி காலத்தில் மாவட்ட நூலகத்தில் தான் படித்த விடுதலைதான் தனக்கு பெரிய மாற்றத்தை கொடுத்தது, கடுமையான பக்திமானாக இருந்த என்னை, என் வாழ்வியல் போக்கை மாற்றியது விடுதலை நாளேடு. ஆள், அம்பு, சேனை என பலவும் வைத்திருக்கும் கட்சிகள்கூட ஒரு பத்திரிக் கையை தொடர்ந்து நடத்துவதில் சிரமப்படுகின்றன. 1936இல் தொடங்கப்பட்ட விடுதலை இன்றளவும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் இதற்கு காரணம் நம்முடைய இயக்கத்தின் கொள்கை, நம்முடைய தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்தான். 85 ஆண்டு கால விடுதலை வரலாற்றில் 58 ஆண்டுகாலம் ஆசிரியராக  ஒருவர் இருப்பது கின்னஸ் சாதனை. ராஜாஜி முதல்வராக இருந்தபொழுது விடுதலை நாளேட்டிற்கு 2000 ரூபாய் பிணைத்தொகை கட்ட வேண்டுமென ஆணை பிறப்பித்து அதனை முடக்கி விடலாம் என்று நினைத்தபோது, தந்தை பெரியார் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இது மக்கள் ஏடு அரசாங்கத்தின் அடக்குமுறைகளால் முடக்கிவிட முடியாது என கழகத் தோழர்கள் ஏராளமான நிதியை வழங்கினார்கள். அப்போது தேவைப்பட்ட தொகை ரூ.2000 தந்தை பெரியார் நிதி போதும் என்று சொன்னபொழுது தோழர்கள் வழங்கிய நிதி ரூ.15000. இப்படி இந்த ஏட்டின் வளர்ச்சிக்கு கழகத் தோழர்களின் பங்களிப்பு ஏராளம்.  தந்தை பெரியார் அவர்களின் பேச்சு, அறிவிப்பு என அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்தது இந்த விடுதலை நாளேடு. 1967 விடயபுரத்தில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில்


“கடவுள் இல்லை, கடவுள் இல்லை


கடவுள் இல்லவே இல்லை


கடவுளை கற்பித்தவன் முட்டாள்


கடவுளை பரப்பியவன் அயோக்கியன்


கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்ற தத்துவத்தை வழங்கினார்கள். உலகில் பல அறிஞர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் இருந்தபோதும் அவர்கள் யாரும் கூறாத, கூற முடியாத இந்த தத்துவத்தை துணிச்சலோடு வழங்கியவர் தந்தை பெரியார், அந்தத் தத்துவம் மக்களிடையே சென்று அடைந்ததற்கு இந்த விடுதலை நாளேடு தான் காரணம்.


தமிழனுக்காகவும், தமிழன் கல்வி, உத்தியோகத் திற்காகவும் தொடர்ந்து பாடுபடுவது 'விடுதலை' தான்.


ஆசிரியர் என்றால் நம்முடைய தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிதான். அந்தத் தலைவர் ஆசிரியர் வீரமணி சொல்லுகிறார் 'விடுதலை' என்பது தமிழ்ச் சமுதாயத்தின் ரேடார் கருவி, நோயாளி சிகிச்சைக்கு மருத்துவமனை. நோயாளி தமிழனுக்கு 'விடுதலை'தான் மருத்துவ மனை, உடைமையை பறிகொடுத்தவனுக்கு எப்படி காவல் நிலையம், அதுபோல் உரிமைகளை பறி கொடுத்த தமிழனுக்கு விடுதலை. இருட்டை விரட்ட கூடியது மின்சாரம் -_அதுபோல் மடமை இருட்டில் இருக்கும் தமிழனுக்கு 'விடுதலை'தான் மின்சாரத்துறை. ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்த நீதித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி நம்மவர்களும் நீதிபதிகளாக அமர்வதற்கு பாடுபட்டது இந்த விடுதலை நாளேடு. அதுபோல் நிர்வாகத்துறை கலைத்துறை என அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தை விளைவித்த ஏடு நம்முடைய விடுதலை ஏடு.  ஈழத்தமிழர்களின் போராட்டங்களை தீவிரவாதமாக மற்ற பத்திரிகைகள் சித்தரித்தபோது அவர்களின் உண்மை சம்பவங்களை மக்களுக்கு கொண்டு சேர்த்தது இந்த விடுதலை நாளிதழ். என்றைக்கும் தமிழனுக்காகவும், தமிழன் கல்வி, உத்தியோகத்திற்காகவும் தொடர்ந்து பாடுபடுவது விடுதலை ஒன்றுதான். இதுபோன்ற எண்ணற்ற பணிகளை தொடர்ந்து இந்த மண்ணில் முன்னெடுத்து வரும் உலகளாவிய ஏடான, நாடுதழுவிய ஏடான விடுதலை நாளிதழ் மக்கள் ஏடாக அதிக அளவில் மக்களிடம் கொண்டு செல்வதில் நாம் உறுதிகொள்ள வேண்டும் அதனுடைய வளர்ச்சிக்கு ஊக்கம் தர வேண்டும் என்று குறிப்பிட்டார். மன்னை மாவட்ட செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.


இக்கூட்டத்தில், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சி.ரமேஷ், தஞ்சை மாவட்ட இணை செயலாளர் தி.வ.ஞானசிகாமணி, பட்டுக்கோட்டை கழக மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன், தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நா.காமராசு, பொதுக்குழு உறுப்பினர் தாராசுரம் இளங்கோவன், ஒக்கநாடு மேலையூர் பெரியார் நகர் உத்திராபதி, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என்.குணசேகரன், மன்னை கழக மாவட்ட ப.க. செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.


பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார், குடந்தை கழக மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் ச.சந்துரு, மன்னை கழக மாவட்டத் துணைச் செயலாளர் புஷ்பநாதன், பட்டுக்கோட்டை மாவட்டத் துணைச் செயலாளர் இரா.நீலகண்டன், மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரப்பாண் டியன், மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச் செல்வி, மண்டல இளைஞரணிச் செயலாளர் வே.ராஜவேல், குடந்தை கழக மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்மணி, தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அன்பழகன், சிங்காரவேலு, பட்டுக் கோட்டை ஒன்றியத் தலைவர் வீரமணி, திருவை யாறு ஒன்றியத் தலைவர் கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின், நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் பொன்னுசாமி, பூதலூர் ஒன்றியத் தலைவர் அல்லூர் பாலு, ஒன்றியச் செயலாளர் புகழேந்தி, அம்மாபேட்டை ஒன்றியத் தலைவர் கி.ஜவகர், மன்னை ஒன்றியச் செயலாளர் மு.தமிழ் செல்வம், தஞ்சாவூர் வடக்கு ஒன்றியத் தலைவர் மாத்தூர் சுதாகர், உரத்தநாடு ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன், குடந்தை மாவட்ட இளைஞரணித் தலைவர் க.சிவக்குமார், தஞ்சை மாவட்ட இளை ஞரணித் தலைவர் ரெ.சுப்பிரமணியன், தஞ்சை மாநகரத் தலைவர் நரேந்திரன், மாநகரச் செய லாளர்  சு.முருகேசன், நீடாமங்கலம் நகரத் தலைவர் ராஜேந்திரன், குடந்தை நகரத் தலைவர் கவுதமன், மன்னை நகரச் செயலாளர் இராமதாசு, மன்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கவுதமன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தங்க.வெற்றிவேந்தன், மன்னை செல்வம், மாத்தூர் இராதாகிருஷ்ணன், ஆத்தூர் செல்வம், பேராசி ரியர் செந்தமிழ்குமார், ஆரப்பாக்கம் சின்னையன், மன்னை மணிகண்டன், குடந்தை இராணி குருசாமி,  மதுரை பவுன்ராசா, சென்னை விமல், குமார், பெரம்பலூர் தங்கராசு, மன்னை போஸ், வேட்டவலம் பி.பட்டாபிராமன், குடந்தை முரு கானந்தம், நீடாமங்கலம் சிவஞானம், மாரி யம்மன்கோவில் பெரியார் கண்ணன், மன்னை அழகிரி, தொழிலாளரணி அமைப்பாளர் முத்து. துரைராஜ், காரைக்குடி பழனிவேல், அத்திவெட்டி வீரமணி, வடமணப்பாக்கம் தமிழ்மணி, வழக் குரைஞர் ஆ.வீரமர்த்தினி, படப்பைகாடு ரஞ்சித், அறந்தாங்கி சந்திரசேகரன், கண்ணை சிவசீலன், கலைச்செல்வம் சிதம்பரம், சம்பத், பொற்செழியன், விடுதலைபுரம் ஜெயக்குமார், தமிழ்ஓவியா மாரி முத்து, தங்கவேலு, சிவக்குமார் மற்றும் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். காணொலியினை திருவெறும்பூரிலிருந்து வி.சி.வில்வம் ஒருங்கிணைத்தார்.


No comments:

Post a Comment