காணொலிக் கல்வி சர்ச்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 26, 2020

காணொலிக் கல்வி சர்ச்சை

தனியார் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி உள்ளதால் அனைவருக்கும்  கல்வி என்னும் அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


அனைத்துச் சிறுவர்களுக்கும் கட்டாயக் கல்வி என்பது அடிப்படை உரிமை என இந்திய அரசமைப்புச் சட்டம் விதி எண் 21-ஏ தெரிவிக்கின்றது. ஆனால் தற்போது கரோனா அச்சத்தால் அதிகளவில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. கரோனா பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாத நிலை உள்ளதால் பள்ளிகள் திறப்பதும் மேலும் மேலும் தள்ளி வைக்கப்படுகிறது.  இந்நிலையில்  சில தனியார் பள்ளிகளில் மட்டும் இணையத்தின் மூலம் (ஆன்லைன்) வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.


கருநாடக மாநிலம் காலாபர்கி மாவட்டத்தில் உள்ள கால்கி கிராமத்தில் உள்ள 37 வயது பெண்மணி சங்கமித்ரா வின் குழந்தைகள் ஒரு தனியார் பள்ளியில் 6 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் படிக்கின்றனர். கட்டட மேஸ்திரி வேலை பார்க்கும் இவர் கணவர் முரளி தற்போது பணி இல்லாததால் ஒரு மளிகைக்கடையில் பணி புரிகிறார்.   இவரிடமும், இவர் மனைவியிடமும் ஸ்மார்ட் போன்கள் உள்ளன.


ஆனால், முரளி தனது பணிக்கு போன் தேவை என்பதால் அதை எடுத்துச் சென்று விடுகிறார்.  இல்லத்தரசி யான அவர் மனைவியின் கைப்பேசியைப் பயன்படுத்தி இரு குழந்தைகளும் படிக்க  வேண்டிய நிலை உள்ளது.  இரு குழந்தைகளுக்கு ஒரு கைப்பேசி. இவர்களில் ஒருவர் மட்டுமே பாடங்களைக் கவனிக்க முடிகிறது.


இணையத்தில் வராத மாணவர்களுக்கு  வருகைப் பதிவு கிடைப்பதில்லை. அந்தச் சிற்றூரில் இணைய  இணைப் பும் (சிக்னல்) சரிவரக் கிடைப்பதில்லை.  அத்துடன் இந்த வகுப்புக்களுக்காக அதிகப் பணத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டியது உள்ளது. தற்போது ஆன்லைன் வகுப்பு களுக்காக அதிக அளவில் டேட்டாக்கள் தேவைப்படு வதால் அதிகப் பணமும் தேவைப்படுகிறது.  இதைப்போல் ஒவ்வொரு கிராமத்திலும் பல சங்கமித்ராக்கள் உள்ளனர்.


பெங்களூரு நகரில் வசிக்கும் ரேவதி என்னும் 36 வயதுப் பெண் சமையல் வேலை செய்து வருகிறார்.அவரது குழந்தைகள் ஆன்லைன் வகுப்புக்காக அவர் மொபைல் வாங்கத் தனது இரு தங்க வளையல்களை விற்றுள்ளார்.  அதுமட்டுமின்றி மொபைல் மூலம் கிடைக் கும் 1 ஜிபி மற்றும் 2 ஜிபி போதுமானதாக இல்லாததால் இவர் தனது மாத ஊதியமான ரூ.7000 இல் இணையக் கட்டணம் மட்டும் மாதத்துக்கு ரூ.1000 செலுத்தி வருகிறார்.


இதுகுறித்து கல்வி ஆர்வலர்கள், கல்விக்காகப் பெற் றோர்கள்  ஏராளமான பணம் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.  இந் நிலையில் கருநாடக மாநில அரசு ஆறாம் வகுப்பில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதி அளித்துள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.


தற்போது அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடப்பதில்லை.   தனியார் பள்ளிகளில் மட்டும் நடைபெறு கிறது. அங்கு குழந்தைகளைப் படிக்க வைக்கும் சாதாரண மக்களிடம் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் போன் றவை இல்லாததால் அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்னும் அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாக ஆர் வலர்கள் தெரிவித்துள்ளனர்.


இணையம் வழி வகுப்புகள் நடத்துவது மாணவர்களி டையே பாரபட்சத்தை ஏற்படுத்தக் கூடியது. சிலருக்குக் கிடைக்கும் வாய்ப்பு பலருக்கு  கிட்டாது.


மாணவர்களிடையே சமத்துவமின்மையைத்தான் உருவாக்கும். தேர்வுகள் நடத்தும் போது, இணையத்தில் படித்தவர்கள் - படிக்க வாய்ப்பு இல்லாதவர்களிடையே மதிப்பெண்கள் அடிப்படையை வைத்து மதிப்பிடும் நிலை நியாயமானதுதானா? நேர்மையானதுதானா? என்ற வினாவை முதலாவதாக திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை மூலம் (6.6.2020) எழுப்பினார்.


இதற்கு ஆதரவு பல முகாம்களிலிருந்தும் பெருகி வருகின்றது. உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.


பொது நிலையிலிருந்து இந்தப்பிரச்சினையை மத்திய, மாநில அரசுகள் அணுக வேண்டும். மாணவர்களைத் தரமானவர்கள், தரமற்றவர்கள் என்று பிரிக்கும் வேலைக்கு அரசு துணைப் போக கூடாது என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்.


No comments:

Post a Comment