“கரோனா சமூகப் பரவல் இல்லை என்றால் நோய்த்தொற்று ஏணிப்படிகள் போல அதிகரிப்பது ஏன்?''
சென்னை,ஜூன்16 தமிழக எதிர்க் கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின் விடுத்துள்ள அறிக்கையில் கரோனா பரவல் குறித்தும், அதைக் கட்டுப்படுத்துவதில் அரசின் செயல்பாடுகள் குறித் தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள் ளார். அறிக்கை வருமாறு:
கரோனா நெருக்கடி நேரத்தில் நோய் குறித்த தகவல்களை மறைக்கும் அரசின் போக்கு மிகவும் ஆபத்தான தாக இருக்கிறது. இன்றைக்கு நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த நோய்த் தொற்று இன்று 10 சதவீதமாக உயர்ந்து விட்டது.
தமிழ்நாட்டில் பத்துப் பேரை பரிசோதித்தால், அதில் ஒருவருக்கு கரோனா என்ற நிலை உருவாகி விட்டது. நோய்த் தொற்றின் எண் ணிக்கை 11 நாட் களுக்குள் இரண்டு மடங்காகி வருகிறது. நாட்டிலேயே இந்த வேகத்தில் அதிகரிக்கும் இரண் டாவது மாநிலம் தமிழகமாக இருக் கிறது. இந்தியாவில் உள்ள பிற எந்த நகரத்தை விடவும் சென்னையில் தான் நோய்ப் பரவலின் விகிதம் அதிகமாக உள்ளது.
பொது சுகாதாரத்துறை (பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநரகம்) சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவமனை களில் 460 பேர் சென்னையில் இறந் துள்ளதாக ஜூன் 9ஆம் தேதி வெளியிட்டுள்ளது. ஆனால் மாநில சுகா தார துறை 224 பேர் மட்டுமே இறந் ததாக தெரிவித்துள்ளது. இரண்டு புள்ளி விவரங்களுமே இருவேறு அரசு நிறுவனங்கள் நேரடியாக வெளி யிட்ட வேறுபட்ட எண்ணிக்கையிலான தகவல் தான். சென்னையில் கரோனா வைரசால் இறந்த 236 பேரின் மரணம் அதாவது இரு மடங்கிற்கும் அதிகமான வர்களின் மரண எண்ணிக்கை மறைக்கப்பட்டுள் ளதுதான் கவலையளிக்கிறது. தவ றான தகவல் மூலம் மறைக்கப்படும் இந்த மரணங்கள் குறித்து உயிரிழந் தோரின் குடும்பத்தினர் அடையும் துயரங்களை இந்த அரசு புரிந்து கொள்ளுமா? இறப்பு பற்றி விசாரிக்க கமிட்டி அமைத்தது மட்டுமே அரசு கொண்டு வந்த ஒரே தீர்வா?
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரின் பரிந்துரையின் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அனைத்து மருத்துவமனைகளில் இருந் தும் பெறப்பட்ட இறப்பு குறித் தான அறிக்கைகளைத் தணிக்கை செய்வதற்கு ஒரு கமிட்டி அமைக் கப்பட்டது. இப்போது மீண்டும் ஒரு இறப்பு எண்ணிக்கை சரிபார்ப்பு கமிட்டியை பழைய கமிட்டி உறுப் பினர்களை வைத்து பொது சுகா தாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந் துத்துறை இயக்குநரின் தலைமையில் நியமித்துள்ளார்கள். தினமும் மாலை யில் கரோனா நோய் குறித்த செய்திக் குறிப்பு வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. ஏப்ரல் 1ஆம் தேதியி லிருந்து ரிப்போர்ட்டிங் பார்மட் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதன்முதலாக 16 வகையிலான தகவல்களுடன் தினசரி செய்திக் குறிப்பு வெளியிட்டார்கள். இன்றைக்கு 9 வகை தகவலுடன் முக்கிய தகவல்களை மறைத்து செய்திக் குறிப்பு வெளியிடுகிறார்கள். மக்களின் இறப்பைத் தெரிவிப்பதில் நடைபெற்றுள்ள இந்தத் தவறின் தீவிரத்தை ஏதோ ஓர் அதிகாரியின் தலையில் பழி போட்டுத் தப்பிக்க முடியாது. அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும். கரோனா சமூக பரவல் இல்லை என் கிறது அரசு. அப்படி என்றால், கரோனா நோய்த்தொற்று தினமும் ஏணிப்படிகள் போல அதிகரிப்பது ஏன்? போன்ற பல்வேறு கேள்விகளை தமிழக அரசை நோக்கி கேட்க விரும்புகிறேன். வரும் அக்டோபர், நவம்பரில் கரோனா பாதிப்பு உச்சி முகட்டை எட்டும் என்று அய்.சி.எம்.ஆர். கொடுத்துள்ள எச்சரிக்கையை, தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை அக்கறையு டன் கவனிக்க வேண்டும். முன்கள வீரர் களுக்கு, தக்க ஊக்குவிப்பும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். கரோனாவில் உயிர் இழந் தோரின் குடும்பங்களுக்குத் தேவை யான நிதி உதவி அளிக்க வேண்டும்.
சென்னை, காஞ்சீபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட் டங்களுக்கு சிறப்புத் திட்டம் வகுத் துச் செயல்படுத்த வேண்டும். அதோடு, கொரோனாவால் உயிரிழந் த வர்களின் எண்ணிக்கையை ஆராய அமைக் கப்பட்டுள்ள குழுவின் அறிக் கையை, எந்தவித ஒளிவு மறைவும் இன்றி அடுத்த 2 நாட்களுக்குள் மக்கள் மன்றத்தின் முன் தமிழக அரசு வைக்க வேண்டும். இந்தப் பிரச்சி னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவில்லை என்றால், தி.மு.க. நீதி மன்றத்தை நாடும். இவ்வாறு அவர் கூறினார்.நன்கொடை
சென்னை ஓட்டேரி பவானி எல்லை யம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் தி. வேலாயுதம் மற்றும் அவரது இணையர் திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ7,500 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி. வாழ்த் துகள்.
- - - - -
திருச்சி, திருவெறும்பூர் கணேசபுரம், ஜெ.பாலசுப்ரமணியன் (அமைப்பாளர்) அவர்களின் மனைவி ஜெ.பி.அலமேலு அம்மை யாரின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை (6.4.2020) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 10,000/- நன்கொடை வழங்கியுள்ளார்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இல்லக்குழந்தைகள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
- காப்பாளர்
No comments:
Post a Comment