கரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 15, 2020

கரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு

சென்னை,ஜூன்15, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனாவால் மேலும் ஒரு செவிலியர் உயிரிழந்துள் ளார். சென்னையில் கரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கரோனா பாதிப்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என என எவரும் தப்பவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொருக்குப்பேட்டையை சேர்ந்த 52 வயது செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் ஏற்கெ னவே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று; சிகிச்சை முடிந்த நிலையில் மீண்டும் பணிக்கு சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்து 2 நாட்கள் ஆன நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை பொறுத்த வரையில் மருத் துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணிய £ளர்கள் என 75 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சென்னை அயன்புரம் இஎஸ்அய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கரோனா வைரஸ் பாதிப்புகள் துல்லியத்


தகவல் அறிய அய்.நா. இணையதளம் அறிமுகம்


நியூயார்க்,ஜூன்15, கரோனா வைரஸ் தொற்று பாதிபப்பு தொடர்பான துல்லியத் தகவல்களை பன்னாட்டளவில் அறிந்து கொள்ளும் வகையிலும், வைரஸ் தொடர்பாக பரப்பப்படும் உண்மைக்கு மாறான தகவல்களை முறியடிக்கவும் அய்.நா. சபை ‘வெரிபைடு' என்ற புது தளத்தை கடந்த மாதம்தொடங்கியது. இந்த தளம் மூலம்துல்லியமான தகவல்கள் தெரிவிக்கப்படும். இந்தியா, பிரான்ஸ், இந்தோனேசியா, நார்வே, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 13 நாடுகள் தரப்பில் வெளியிட்ட அறிக்கைக்கு, 132 அய்.நா. உறுப்பு நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன.


அய்.நா. பொதுச்செயலர் அந்தோனியோ குத்தேரஸ் இது தொடர்பாக கூறும்போது, ‘‘கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த உலகம் கடுமையாக போராடுகிறது. இவற்றுக்கு இடையில் கரோனா வைரஸ் பற்றி உண்மை,பொய் கலந்த தகவல் பரப்பப்படுகிறது. தவறான மருத்துவ ஆலோசனைகளும், வெறுப்பு தரும் பேச்சுகளும் வெளியிடப்படுகின்றன. இணைய தளங்கள், செயலிகள் உள்ளிட்டவை மூலம் திட்டமிட்டுஇவை பரப்பப்படுகின்றன. இதற்கான தீர்வு, அறிவியல் ரீதியில் நிரூ பிக்கப்பட்ட தகவல்களை மக்களுக்கு பகிர்வதுதான்’’ என்றார்.


‘வெரிபைடு' தளத்தில் இணைந்து உண்மை தகவல்களை பரப்பும் தன்னார்வலர்களாக மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்று அய்.நா. கோரியுள்ளது. அய்.நா.வின் இந்த முயற்சிக்கு அய்.நா.வுக்கான இந்திய தூதர் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் தரப்பில் இந்த பிராந்தியம் முழுமைக்குமாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


கரோனா வைரஸ் தொற்று எப்படி கொடியதோ அதேபோன்று தீங்கிழைக்கக் கூடியது பொய்தகவல்களை பரப்புவது. பொய் தகவல்கள் மக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியவை. கரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பொய் தகவல்கள், வதந்திகள் பரவுவதற்கான சூழலையும் அது ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வைரஸை காரணமாக்கி வீடியோக்களில் மாற்றம் செய்து வகுப்பு மோதல், வன்முறையை தூண்டுவதற்கான சூழலும் உருவாக்கப்படுகிறது. இவற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் அவசரம் காட்ட வேண்டும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment