டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, வருகிற ஜூன் 20ஆம் தேதி நடைபெற உள்ள மருத்துவக் கல்வி மேற்படிப்புத் தேர்வினை ரத்து செய்வது அல்லது தள்ளி வைப்பது குறித்து முடிவெடுக்குமாறு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராசன் அதிகாரி களிடம் தெரிவித்துள்ளார்.
- மோடி ஆட்சியில் கரோனா தடுப்புப் பணி சரிவர நடைபெற வில்லை; பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் இதைப்பற்றி எதுவும் கவலை இல்லாது, பாஜக அல்லாத அரசுகளைக் கவிழ்க்கும் பணியில் மோடி ஈடுபட்டுள்ளார். ஆனால் அவரது பக்தர்கள் இதைப் பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாது அவர் புகழ் பாடி வருகிறார்கள். இவர்களை அக்கறையற்ற பக்தர்கள் என்றுதான் கூற வேண்டும் என ஆகார் படேல் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- இந்திய ஜனநாயக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது மத்திய ஆட்சி, தலைமைத்துவம் இல்லாமல் உள்ளது. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், ஆறு ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த பின்பும், எதிர்க் கட்சிகளே இல்லாத நிலையிலும், எப்போதும் தான் பாதிக்கப்பட்ட மனிதன் எனப் புலம்புவது, மக்கள் தன்னிடம் எந்த கேள்வியும் கேட்காமல் தடுத்திடும் யுக்தியாகவே உள்ளது என பிரதாப் பானு மேக்தா, 'எங்கே தலைவர்?' எனும் தலைப்பிலான கட்டுரையில் மோடி ஆட்சியின் தன்மையைச் சாடியுள்ளார்.
தி இந்து, டில்லி பதிப்பு:
- சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங் களில், ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை மீண்டும் முழு அடைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வங்கிகள் 19 முதல் 28 வரை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லி பதிப்பு
- தகுதிப் பட்டியலில் முதலிடம் வகித்த ஒரு மத்திய பிரதேச பிற்படுத்தப்பட்ட பெண்மணிக்கு, பொதுப்போட்டிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் புவியியல் உதவிப் பேராசிரியராக சேர அனுமதி அளித்த மத்தியப் பிரதேச அரசின் ஆணைக்கு தடை விதித்த இந்தூர் நீதிமன்ற ஆணையை ரத்து செய்து, பொதுப்போட்டி இடத்தை பேராசிரியருக்கு ஒதுக்கி, உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
- குடந்தை கருணா,
16.6.2020
No comments:
Post a Comment