ஒசூர், ஜூன் 16- உலகக் குருதிக் கொடை நாளில் (ஜூன்14 ) தமிழ்நாடு அறிவியல் இயக் கம் (வார்டு கிளை) மற்றும் ஒசூர் நிழல் அறக்கட்டளை இணைந்து குருதிக்கொடை முகாம் ஒசூர் அரசு மருத்துவ மனையில் 14.6.2020 அன்று காலை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் தலை மையில் அரசு மருத்துவர் மகேஷ், ஒசூர் நிழல் அறக் கட்டளை செயற்குழு உறுப் பினர் சட்டக்கல்லூரி மாண வர் வெற்றி ஆகியோர் முன் னிலையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 41 குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினார்கள். குருதிக் கொடையாளர் அனைவருக் கும் அரசு மருத்துமனை சார் பில் சான்றிதழ் வழங்கப்பட் டது. அனைவருக்கும் நிழல் அறக்கட்டளை சார்பில் பழம், பிஸ்கெட், பழச்சாறு, நினைவு கேடயம் வழங்கப்பட் டது. இதில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சு.வன வேந்தன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செய லாளர் பாலகிருஷ்ணன் ஆகி யோர் சான்றிதழ் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
ஒசூர் அரசு மருத்துவ மனைக்கு சானிடைசருடன் கூடிய ஸ்டாண்ட் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்குத் தேவையான ஸ்மைல்பால் 12 நிழல் அறக்கட்டளை சார் பில் அதன் செயற்குழு உறுப் பினர்கள் நாகர்ஜுன், சகஸ் திரன், ராஜசேகர், சித்தாந்தன் இணைந்து வழங்கினார்கள்.
No comments:
Post a Comment