செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 27, 2020

செய்தித் துளிகள்....

* தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைகிறது - பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரு நாள்களில் மழை.


* 2012 முதல் 2020 வரை தமிழ்நாட்டில் சிறையில் மரணம் 260.


* இந்தியாவில் வரும் ஜூலை 15 வரை  பன்னாட்டு விமானப் போக்குவரத்திற்குத் தடை.


* நீட் தேர்வு செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளி வைப்பாம்.


* தமிழ்நாட்டில் பேருந்துகளில் விசிலுக்குப் பதில் ‘‘காலிங் பெல்!''.


* தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கு ஏழரை லட்சம் பேர் காத்திருப்பு.


* தமிழ்நாட்டில் அடுத்த கட்ட ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் நாளை முடிவு.


* தொற்று ஏற்பட்ட 80% மக்களுக்கு அறிகுறி தெரிகிறது இது ஒரு மாற்றமே!.


* தெற்காசிய நாடுகளை அச்சுறுத்தி வரும் சீனாவுக்குப் பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராம்.


* கல்லணை கால்வாயை சீரமைக்க ரூ.2,298 கோடியில் திட்டம் - முதலமைச்சர் அறிவிப்பு.


* சாத்தான்குளம் - காவல் நிலைய சாவு - மாஜிஸ்திரேட் அவ்வூரில் தங்கி விசாரிக்க மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் ஆணை.


* அறிவியல் ஆதாரமற்ற மருந்துகள் - நிபுணர்கள் எச்சரிக்கை.


* இந்தியாவில் மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து, சிக்கிமில் கரோனாவால் உயிரிழப்பு இல்லை.


* கரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட டில்லி சுகா தாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குணமடைந்து வீடு திரும் பினார்.


No comments:

Post a Comment