சுட்டுரைப்பதிவில் தமிழர் தலைவர்
சென்னை,ஜூன்12, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுட்டுரைப்பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது:
உலகமே கரோனா பெருந்தொற்றை ஒழிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ.க.வோ, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. இப்போது கரோனாவால் இந்தியா திணறிக் கொண்டிருக்கும்போது, மாநிலங்களவையில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள குஜராத், ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் வேகத்தில் இருக்கிறது பா.ஜ.க! கரோனாவை விட கொடியது ஜனநாயகத்தைக் குறிவைக்கும் இந்த வைரஸ் தொற்று! இவ்வாறு சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment