செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 12, 2020

செய்தித் துளிகள்....

* உலகெங்கும் 31 நாடுகளைச் சேர்ந்த 127 ஊடகத்தினர் கரோனாவால் உயிரிழப்பு.


* அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான போராட்டத்தில் சில இடங்களில் காவல்துறையினரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கைகோர்த்தனர்.


* தமிழ் உச்சரிப்பைப் போன்றே 1508 ஊர்களின் ஆங்கிலப் பெயர்களை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை (எடுத்துக்காட்டு டுடிகுரின் என்ற ஆங்கில மொழி உச்சரிப்பு இனி தூத்துக்குடி என்றே ஒலிக்கப்படும்).


* சென்னையில் ஊரடங்கை அறிவித்தால் 15 நாள்களும் கடைகளை அடைக்கத் தயார் என்று தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவிப்பு.


* மேட்டூர் அணை நீரை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.


* கருநாடகாவில் 7 ஆம் வகுப்புவரை இணையத்தின் வழி வகுப்புகள் நடத்திடத் தடை!


* கரோனா பாதிப்பால் மத்திய அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு என்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.


* காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கவே மாநிலங்களவைத் தேர்தலைத் தாமதப்படுத்தியது பி.ஜே.பி. என்று ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு.


* கரோனாவால் விமான நிறுவனங்களுக்கான நட்டம் ரூ.6.32 லட்சம் கோடி.


* இந்திய மலைப் பகுதிப் படை வீரர்களுக்கு அனுபவம் அதிகம் என்று சீன இராணுவ வீரர் பாராட்டு!


* சி.ஏ.ஏ.வுக்கு எதிராகப் போராடிய சஃபூரா சர்கார் என்ற பிஎச்.டி., மாணவி 2 மாதங்களாக சிறையில் உள்ளார். 5 மாத கர்ப்பிணிப் பெண் இவர். மூன்றாவது முறையும் இவருக்குப் பிணை மறுப்பாம்!


* இம்மாதமும் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது - கேரள அரசு அறிவிப்பு.


No comments:

Post a Comment