கரோனாவின் கோரப் பிடியிலிருந்து  மக்களை காக்க நேரத்தை செலவிட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 13, 2020

கரோனாவின் கோரப் பிடியிலிருந்து  மக்களை காக்க நேரத்தை செலவிட வேண்டும்

தளபதி மு.க.ஸ்டாலின் அரசுக்கு வலியுறுத்தல்



சென்னை,ஜூன்13, “மத்திய பாஜக அரசை மகிழ்விப்பதில் செலவிடும் நேரத்தின் சிறு பகுதியையாவது கரோனாவின் கோரப் பிடியிலிருந்து மக்களைக் காக்க செலவிட வேண்டும்” என்று அதிமுக அரசுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத் துள்ளார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று  (12.6.2020) வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அய்ந்தாம் கட்ட ஊரடங்கு காலம் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்கள் இருக் கும் நிலையில், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்தி ருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. உலகத்திலேயே ஊர டங்கை, இத்தனை ஓட்டை உடைசல் களோடு, இவ்வளவு கேவலமாக, அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழக மாகத்தான் இருக்கும். அரசாங்கம் தனது கடமையைச் செய்யத் தவறி யதால், தனது பொறுப்பைத் தட்டிக் கழித்ததால், ஏற்படுத்தப்பட்ட ஊர டங்கு தளர்வுகள் தான், இன்றைக்கு கரோனா பாதிப்பில் தமிழகம், இந் தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்க வேண்டிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது.


 இறப்பு விகிதம் குறைவு என்று முதல்வர் திரும்பத் திரும்பச் சொல்லி, தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு, தமிழக மக்களையும் ஏமாற்றலாம் என்று நினைக்கிறார். 


சென்னையில் அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் 200 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மகப்பேறுக்கு தயாராகி வரும் தாய் மார்கள் 200 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காவல் துறை நண்பர்கள் ஏராளமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஊடகவி யலாளர்கள் பாதிக்கப்பட்டுள் ளார்கள். 12 வயதுக்கு உட்பட்ட குழந் தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து தரப்பிலும் பாதிப்புகள் அனுதினமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. 


அனைத்துத் தேவைகளையும் வழங்கி,  மக்களை வீட்டுக்குள் தனி மைப்படுத்தி இருக்க வைப்பது அரசின் கடமை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்க வேண்டும். தலைநகர் சென்னை மிகமிக மோசமான பேரா பத்தைச்  சந்தித்துக் கொண்டுள்ளது. ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிப்பது மட்டுமே அரசாங்கத்தின் கடமை அல்ல; அடுத்தடுத்து தேவை யான மருத்துவக் கட்டமைப்பை  திட்டமிட்டு, கரோனாவை தடுப்பதே அரசாங்கத்தின் கடமை என்பதை உணருங்கள். டெண்டர்களை இறுதி செய்வதிலும், தமக்கு அவசியம் என கருதும் கோப்புகளை நகர்த்துவதிலும், மத்திய பா.ஜ. அரசை மகிழ்விப்பதிலும் செலவிடும் நேரத்தின் ஒரு சிறு பகுதியையாவது, கரோனாவின் கோரப் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு செலவிடக் கரு ணையுடன் முன்வாருங்கள். இவ் வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment