மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 17, 2020

மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

இடஒதுக்கீட்டுப் பிரிவில் விண்ணப்பித்தவர்கள் தகுதி அடிப்படையில் பொதுப்பிரிவுக்கு மாறக்கூடாதா?


புதுடில்லி,ஜூன்17 அரசு வேலைக்கு மெரிட்டில் தேர்வான இடஒதுக்கீட்டு பிரிவினர் பொதுப் பிரிவுக்கு இடம் பெயர்வதை தடுத்த மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை  விதித்துள்ளது.


மத்தியப் பிரதேசத்தில் 84 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை அம் மாநில தேர்வாணையம் நடத் தியது. இதில் பெண்களுக்கான 26 பதவியில், 12 பொதுப்பிரிவுக்கும்,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு தலா 6 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 4 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.


சாதனா சிங் தாங்கி என்பவர் பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரி வில் தேர்வெழுதி, தகுதிநிலையில் (மெரிட்டில்) முதல் மதிப்பெண் பெற்றார். இதனால், பிற்படுத்தப் பட்டவருக்கான  இடஒதுக்கீட்டுப் பலனை பெறாமல், அவர் பொதுப்பிரிவு மூலமாக பணியில் சேர விருப்பம் தெரிவித்தார். இதற்கு பொதுப்பிரிவை சேர்ந்த பிற தேர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேச உயர்நீதி மன்றத்தை அணுகினர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீடு பிரிவில் தேர்வு எழுதியவர், அதிக மதிப்பெண் பெற்று தகுதிகளை பெற்றிருந்தாலும், பொதுப்பிரிவு இடத்திலிருந்து பணியில் சேர முடி யாது என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை சாதனா அணுகினார். இந்த மனு நீதிபதிகள் யு.யு.லலித், சந்தனா கவுடர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக் குரைஞர், பொதுப்பிரிவு என்பது எல்லோருக்கும் பொதுவான பிரிவு. அதில் யாருக்கும் எந்த இடஒதுக்கீடும் இல்லை. 


எனவே, எந்த பிரிவைச் சேர்ந்தவர்களும் பொதுப் பிரிவுக்கு இடம் பெயர முடியும் என வாதாடி னார்.


இதைக் கேட்ட நீதிபதிகள், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற தேர்வாளர்கள் அவரவர் தரப்பு கருத் துக்களை 2 வாரத்தில் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.


No comments:

Post a Comment