வேலூர்,ஜூன்17, வேலூர் மாவட்ட மகளிரணி மகளிர் பாசறை சார்பில் பட்டிமன்றம் காணொலி வழியாக 2.6.2020 செவ்வாய்க்கிழமை அன்று மாலை நடைபெற்றது. இன்றைய திரைப்படங்கள் பேசுவது "சமத்து வத்தையா? சனாதனத்தையா?" என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி பட்டிமன்றத்தில் வேலூர் மாவட்ட மகளிரணித் தலைவர் ச.ஈஸ்வரி தொடக்கவுரையாற்றினார்.வேலூர் மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் சி.லதா வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் கலைமணி, வேலூர் மாவட்ட மகளிரணி அமைப் பாளர் கலைவாணி முன்னிலை வகித் தனர். பிரச்சாரச் செயலாளர் வழக் குரரைஞர் அ.அருள்மொழி பட்டி மன்ற நடுவராக இருந்து சிறப்பாக நடத்தினார். இன்றைய திரைப் படங்கள் பேசுவது சமத்துவத்தையே என்ற தலைப்பில் சென்னை மண்டல மகளிர் பாசறை செயலாளர் ஓவியா அன்பு மொழி, தலை மைக் கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் தங்களுடைய கருத்துகளை வலுவாக பதிய வைத்தனர். இன் றைய திரைப் படங்கள் பேசுவது சனாதனத் தையே என்ற தலைப்பில் மாநில மக ளிர் பாசறை செயலாளர் வழக் குரைஞர் பா.மணி யம்மை, காரைக்குடி மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் குமரன் தாஸ் தங்களுடைய வலுவான கருத் துகளைப் பதிவு செய்தனர். இறுதியாக இரண்டு பக்கத்தினரின் வாதத்தையும் கேட்டு தன் கருத்தை பதிவு செய்த நடுவர், இன்றைய திரைப்படங்கள் பேசுவது சமத்துவத்தையே என்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த நிகழ்வில் வேலூர் மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் தி.அனிதா தாரணி நன்றி கூறினார். இந்த காணொலி நிகழ்ச்சி தொகுப்புப் பணிகளை மாணவர் கழகம் வி.சி.சங்கநிதி மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணி அமைப்பாளர் ந.தேன்மொழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். வேலூர் மாவட்ட ம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கழகத்தோழர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment