காணொலியில் நடைபெற்ற “திராவிடர் இயக்க முன்னோடிகள்” கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 17, 2020

காணொலியில் நடைபெற்ற “திராவிடர் இயக்க முன்னோடிகள்” கருத்தரங்கம்


திருவையாறு, ஜூன் 17, திருவை யாறு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் இயக்க முன் னோடிகள் கருத்தரங்கம் 10.6.2020 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வின் தொடக்கத்தில் 10.6.2020 அன்று காலை இயற்கை எய்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் மறை வுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரி விக்கும் விதமாக ஒரு நிமிடம் அமைதி கடைப்பிடிக்கப்பட்டு மரி யாதை செலுத்தப்பட்டது.


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் தலைமையில் வாழ்க்கை இணையேற்பு ஏற்றுக் கொண்டவரான கருத்தரங்க சிறப்புப் பேச்சாளர், மதிமுக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன்  அவர்களுக்கு அனைவரும் வாழ்க்கை இணை யேற்பு நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். திருவையாறு ஒன்றியத்  தலைவர் ச.கண்ணன் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்.


காப்பாளர் வெ.ஜெயராமன் தலைமை ஏற்று திராவிடர் இயக்க முன்னோடிகளின் அளப்பரிய தொண்டால் நம் திராவிடர் சமுதா யம் பெற்ற ஏற்றத்தை எடுத்துக் காட் டினார்.  திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் தொடக்க உரையில், தந்தை பெரியாருக்கும், திராவிட செம்மல் சர். பிட்டி தியாகராயர் அவர்களுக் கும் இருந்த உறவினை விரிவாக எடுத் துரைத்தார். திராவிடர் சமுதாயத்தில்  இந்த தலைவர்களின் தொண்டு எத்தகைய மாற்றங்களை ஏற்படுத் தியது என விளக்கிப் பேசி னார். ம.தி.மு.க. அரசியல் ஆலோச னைக் குழு செயலாளர் எம்.செந்தில திபன்,  கரோனா காலத்திலும் முடங்கியிராமல் திராவிடர் கழகம் எடுத்து வரும் இத்தகைய சீரிய முயற்சியை பாராட்டியும், தற்போ தைய அரசியல் தேவையையும்  விளக்கிப் பேசினார்.


தஞ்சை மண்டலத் தலைவர் மு. அய்யனார் தம் உரையில், ஆ.வந்தியத் தேவன் அவர்களை வாழ்த்தியும், அவரின் பகுத்தறிவுப் பணிகளையும், தற்போது மதிமுகவில் தொடர்ந்து அரசியல் பணியாற்றி வருவதை யும் பாராட்டினார். தஞ்சை மாவட்ட  கழகத் தலைவர் வழக் குரைஞர் சி.அமர்சிங்,  திருவையாறு  பார்ப் பனர்களின் ஆதிக்க புரியாக இருந்ததைப் பற்றியும், அதில் திரா விடர் கழகம் பல் வேறு போராட்டங் களை நடத்தி மக்களி டையே விழிப் புணர்வை ஏற்படுத்தி யதையும் விரிவாக எடுத்துரைத்தார்.


மாவட்ட செய லாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, தஞ்சை நகரத் தலைவர் பா. நரேந்திரன், பகுத் தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கோபு.பழனிவேல் ஆகி யோர் உரையாற்றினர்.


ம.தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆ.வந்தியத்தேவன் சிறப்புரையில்: திராவிடர் இயக்கச் செம்மல் வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி தியாகராயர் அவர்களைப் பற்றியும், சீரிய தொண்டினையும் டி.நடே சனார், டி.எம்.நாயர் ஆகியோருடன் இணைந்து பார்ப்பனர் சூழ்ச்சியால் ஏற்பட்ட இந்த சமுதாய இழிவுகளை மாற்றவும், அனைவரும் சமமாக மதிக்கப்படவும், அனைவரும் கல்வி வேலைவாய்ப்பு பெற்றிடவும் எவ் வாறு  தொண்டாற்றினார் என் பதைப்பற்றி விரிவாகவும், எளி மையாகவும் அனைவருக்கும் புரியும் வண்ணம் பேசினார். கருத்தரங்கைப் பற்றி சிங்கப்பூரிலிருந்து கலந்து கொண்ட ம.அதியமான் நெடுமா னஞ்சி, காரை. செல்வராஜ், நாமக் கல்லில் இருந்து கலந்துகொண்ட தோழர் பத்மா ஆகியோர் தங்கள் கருத்துகளை பதிவிட்டனர்.


இந்த நிகழ்வில் புதுச்சேரி மாநில தலைவர்  சிவ .வீரமணி,  தஞ்சை மண்டல  மகளிரணிச்  செயலாளர்  தோழர்  அ. கலைச்செல்வி , தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்  சந்துரு, தஞ்சை ‘விடுதலை’ வாசகர் வட்டம் ஏவிஎம் குணசேகரன், திருத்துறைப்பூண்டி மாவட்ட செய லாளர்  சு.கிருஷ்ணமூர்த்தி, ஆத்தூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் வேல்முருகன்,  தஞ்சை  மாநகர இளைஞரணிச் செயலாளர்  பெரியார் செல்வம், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர்  க. அரங்கராசன், பிஎச்இஎல் தோழர்  ஆறுமுகம், பூதலூர் ஒன்றிய தலைவர்  அல்லூர் பாலு,  திருவையாறு ஒன்றிய பகுத் தறிவாளர் கழகச் செயலாளர் க.தமிழரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் என். வெங்கடேசன், திருவையாறு பேரூர் தலைவர் கோ.கவுதமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  இறுதியாக  திருவை யாறு ஒன்றிய  செயலாளர்  வழக் குரைஞர்  துரை.ஸ்டாலின்  அவர்கள் நன்றி கூறினார்.  கருத்தரங்க நிகழ்ச்சி  மாலை  7.50  மணி அளவில்  முடி வுற்றது.


No comments:

Post a Comment