தொற்றுநோய் காலத்திலும் சமூக சேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 26, 2020

தொற்றுநோய் காலத்திலும் சமூக சேவை

.சென்னை, ஜூன் 26- பெடக்ஸ் கார்ப் நிறுவனம் கோவிட்-19 தொற்று நோய் பாதிப்பு சமயத்திலும் கூட, நிறுவனம் தனது உலகளாவிய நெட்வொர்க்கை பயன்படுத்தி வர்த்தகத்தையும், சமூக உதவி களையும் சாத்தியமாக்கி உள்ளது.


பெடக்ஸ் கார்ப். நிறுவனத்தின் தலைமை நிலைத்தன்மை அதி காரி மிட்ச் ஜாக்சன் கூறுகையில்,  எங்கள் உலகளாவிய அணுகல் மற்றும் நோக்கம் சார்ந்த பணிகளை அடிப்படையாக கொண்டு செயல்பட, நாங்கள் எவ்வாறு சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) உத்திகளை வகுக்கிறோம் என்பதை விளக்குகிறது. அதோடு, இந்த உலகை எவ்வாறு பொறுப்புடனும், வளமாகவும் இணைக்கிறோம் என்பதையும் காட்டுகிறது. இதுபோன்ற முன்னோடியில்லாத கால கட்டத்தில், உலகளாவிய ஆதரவு கிடைக்கும் போது, நாங்கள் எவ் வாறு தொடர்ந்து செயல் படுவோம் என்பதற்கும் இது ஓர் எடுத்துக் காட்டாகும் என்றார்.


50 சதவிகித மின் நுகர்வில்


தூசி எதிர்ப்பு பூச்சுடன் மின்விசிறிகள்


சென்னை, ஜூன் 26- கிராம்ப்டன் க்ரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிகல்ஸ்  நிறுவனம் தொழில் நுட்பத்தின் ஆற்றலுடன் கூடிய சைலண்ட் ப்ரோ எனப்படும் மின்விசிறிகளின் புதிய எதிர் காலத்திய வடிவமைப்பு களை வெளியிட்டுள்ளது. இது வழக்கமான மின்விசிறிகளை விட 2 மடங்குகள் அமைதியாக இயங்கும் மற்றும் மின்சார செலவில் 50% வரை சேமிப்பை வழங்கும். 


அமைதியான இயக்கத்துடன், அதிக செயல்திறனை உறுதிப் படுத்தும் இந்த ஏரோடைனமிக் வடிவமைப்பு ஸ்மார்ட் ரிமோட் ஆபரேஷனுடன் வருகிறது. இந்த சைலண்ட் ப்ரோ மின்-விசிறி ஒரு தூசி எதிர்ப்புப் பூச்சுடன் கிடைக்கிறது. இது நீண்ட காலம் நீடித்து நிலைக்கும் மற்றும் இதை சுத்தம் செய்வது மிகவும் எளிதானதாகும் என நிறுவனத்தின் துணைத் தலைவர் ரங்கராஜன் சிறீராம் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் நடுகடலில்


கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் போராட்டம்


புதுச்சேரி, ஜூன் 26- புதுச்சேரியில் நடுகடலில் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.


No comments:

Post a Comment