மறைந்த கழகத் தோழர் குடும்பத்தினருக்கு  தூத்துக்குடி மாவட்டக் கழகம் சார்பில் ஆறுதல், மனிதநேய உதவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 26, 2020

மறைந்த கழகத் தோழர் குடும்பத்தினருக்கு  தூத்துக்குடி மாவட்டக் கழகம் சார்பில் ஆறுதல், மனிதநேய உதவிகள்


தூத்துக்குடி, ஜூன் 26- தூத்துக்குடி மாவட் டம் திருவைகுண்டம் தாலுகா முதல்கரை ஊரைச் சார்ந்தவர், திராவிடர் கழகத்தின் சிறந்த செயல் வீரர் ஆறுமுகநயினார் ஆவார். வட்டார மாநாட்டின்போது, தமிழர் தலைவர் முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்டவர். தொடர்ந்து கழகப்பணிகளைக் கட்டுப் பாட்டுடன் ஆற்றிவந்தவர்.


அவர் உடல் நலக்கோளாறு காரணமாக 5.4.2020இல் உயிரிழந்தார். அவரது  மறைவு கழகத்திற்கும், அக்குடும்பத்திற்கும் பேரிழப்பாகும். அவர் மறைவுற்றத் தகவல் அறிந்து, கழகப் பொறுப்பாளர்கள்  இரங் கலையும், ஆறுதலையும் குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர். அவருக்கு முத்துஇசக்கி என்ற மனைவியும், பத்திரகாளி, இசக்கி யம்மாள் என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். பெண் குழந்தைகள் முறையே 9ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.


தூத்துக்குடி பெரியார் மய்யப் பொறுப் பாளர் சு.காசி மூலம் அக்குடும்பத்திற்கு உரிய உதவிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.


21.6.2020 ஞாயிறன்று காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடியிலிருந்து பெரியார் மய்யப் பொறுப்பாளர் சு.காசி தலைமையில் தி.முக. தோழர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் மண்டலத் தலைவர் பால் இராசேந்திரம் குழந்தைகளின் கல்வி நிதியாக ரூ.36,000 (முப்பத்தாறாயிரம்) மறைவுற்ற ஆறுமுகநயினார் அவர்களின் துணைவியாரிடமும் அவரது இரண்டு பெண் குழந்தைகளிடமும் வழங்கினார்.


ரூ.10,000  தொகையை ரொக்கமாகவும், ரூ. 26,000தொகையை அக்குழந்தைகளின் பேரில் நிரந்தர வைப்பு நிதியாக வழங்கிட முடிவு செய்யப்பட்டு அப்பொறுப்பு திரு வைகுண்டம் திராவிடர் கழகப் பொறுப் பாளர் திருமலையிடம் ஒப்படைக்கப்பட்டது.


மறைந்த தோழர் ஆறுமுக நயினார் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் கழகப் பொறுப்பாளர்களிடம் நன்றியைத் தெரிவித்தனர்.


சுப்புராசு, பழனிச்சாமி, சங்கரலிங்கம், சுப்பையா, இராதா, மாணிக்கராசு ஆசிரி யர், செல்லத்துரை, போசு, நெல்லை மண்டலத் தலைவர் பால் இராசேந்திரம், திருமலை, பொன்ராசு உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.


இந்த நிகழ்வை கூடியிருந்த பொதுமக் களும் தி.மு.க. தோழர்களும் வியந்து பாராட்டினர். அனைவருக்கும் குளிர்பா னம் வழங்கப்பட்டது. முடிவில் தி.மு.க. தோழர் சண்முகசுந்தரம் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்தார்.


நிதியளித்தவர்கள்


தி.ப.பெரியாரடியான் (மாவட்டத் தலைவர், தூத்துக்குடி) ரூ.2,000,  மு.முனிய சாமி (மாவட்டச் செயலாளர், தூத்துக்குடி) ரூ.2,000, மா.பால் இராசேந்திரம் (நெல்லை மண்டலத் தலைவர், சிவகளை) ரூ.1,000, சு.காசி (பெரியார் மய்யப் பொறுப்பாளர், தூத்துக்குடி) ரூ.2,000, சுப்பராசு (துறை முகம், தூத்துக்குடி) ரூ.2000, பழனிச்சாமி (துறைமுகம்,  தூத்துக்குடி) ரூ.2000, சங்கர லிங்கம் (துறைமுகம், தூத்துக்குடி) ரூ.2000, சுப்பையா (துறைமுகம், தூத்துக்குடி) ரூ.1000, வெங்கட்ராமன் (ப.க., தூத்துக்குடி) ரூ.2000, புத்தன் (ப.க., தூத்துக்குடி)ரூ.2000, இராசேந்திரன், (மாவட்டச் செயலாளர், தி.க., நெல்லை)ரூ.2000, மா.பழனிச்சாமி (ஆசிரியர், ப.க. தூத்துக்குடி)ரூ.2000, மாணிக்கராசு (ஆசிரியர், தூத்துக்குடி)ரூ.2,500, செ.சாமுவேல்துரை (ஆசிரியர், புதியம்புத்தூர்)ரூ.2000, அருண்குமார் (ஆசிரியர், மறவன்மடம்)ரூ.2000, அ.அருட்செல்வன் (ஆசிரியர், விருதுநகர்)ரூ.2000, அருள்ராசு (பணி நிறைவு, ஆசிரி யர், கயத்தார்)ரூ.2000, இரமேசு (ஆசிரியர், தூத்தக்குடி)ரூ.2000, கனகராசு (திராவிடர் கழகம், திருச்சி)ரூ.2000, திருமலைக்கும ரேசன் (திருவைகுண்டம்) ரூ.500 ஆக மொத்தம் 36,000.


No comments:

Post a Comment