செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 26, 2020

செய்தித் துளிகள்....

* கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குச் செல்லுவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.


*அரசு ஊழியர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் கரோனாவும் சேர்க்கப்பட்டுள்ளது.


* கழுதைப் பால் குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தி பரவும் என்ற நம்பிக்கையில் கடலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்குக் கழுதைப் பால் அளிக்கப்படுகிறது.


* கருநாடக மாநிலத்தில் முதலமைச்சர் பரிந்துரை செய்த இரு வேட்பாளர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மாநிலங்களவைக்கு வேறு இருவரைக் கட்சி மேலிடம் தேர்வு செய்தது. (கட்சிக்குள் பெருங்குழப்பம்!).


* பிரதமர் மோடி கரோனாவை மட்டுமல்ல, பெட்ரோல், டீசல் விலையையும் கட்டவிழ்த்து விட்டுள்ளார் என்கிறார் ராகுல் காந்தி எம்.பி.


* தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு ‘ரெம்டெசி வீர்' என்ற கரோனா தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


* சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முற்றிலும் ரத்து. 12 ஆம் வகுப்புத் தேர்வைப் பொறுத்தவரை விரைவில் மத்திய அரசு முடிவெடுக்கும்.


* தற்போதுள்ள அறிவியல் சிக்கல்களுக்கு நானோ தொழில்நுட்பம்தான் தீர்வு என்கிறார் நோபல் அறிஞர் ஆண்ட்ரே ஜெய்ம்.


* ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை இரயில் சேவை ரத்து.


* சாமியார் ராம்தேவின் கரோனா மருந்தை விற்றால் நடவடிக்கை - ராஜஸ்தான் அரசு எச்சரிக்கை!


* மே மாதத்திலிருந்து லடாக் பகுதியில் சீனா படைகளைக் குவித்து வருகிறது - காலந்தாழ்ந்து இந்தியா குற்றச்சாட்டு.


No comments:

Post a Comment