செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 15, 2020

செய்தித் துளிகள்....

* சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 277 கரோனா நோயாளிகள் ஓடிவிட்டனர் - தவறான முகவரிகளை அவர்கள் கொடுத்ததால் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


* ‘மன் கி பாத்தில்' பேச பொது மக்களிடம் யோசனை கேட்கிறாராம் பிரதமர் மோடி.


* சென்னை பொது மருத்துவமனை டீன் விடுப்பில் உள்ளதால், பொறுப்பு டீனாக டாக்டர் நாராயணசாமி நியமனம்.


* காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத்துக்காக கல்லணையில் நாளை நீர்த் திறப்பு.


* மேட்டூர் அணையில் நீர் வரத்து வினாடிக்கு 1,643 கன அடி. நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடி.


* கரோனா - நகம் கடிக்கும் பழக்கம் - ரூபாய் நோட்டை எச்சில் தொட்டு எண்ணுவது ஆபத்து!


* தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த போலீசாருக்கு கரோனா பரிசோதனை - கட்டாயத் திட்டத்தை சென்னை மாநகரக் காவல் ஆணையர் அறிவிப்பு.


* தனியார் மயத்தைக் கண்டித்து பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் சார்பில் வரும் 17 வரை வேலை நிறுத்த வாக்கெடுப்பு.


* தஞ்சை அருகே பூதலூரில் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் சிலை கண்டுபிடிப்பு- இது ஆய்வாளர் மாறனின் முயற்சி.


* கரோனாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்கிட அனுமதி.


No comments:

Post a Comment