பா.ஜ.க. என்றால்... பார்ப்பன ஜனதா கட்சி என்று சொன்னால் பார்ப்பனர்களுக்கு மிளகாயைக் கடித்தது போன்று ‘சுள்ளென்று' உரைக்கிறது. உச்சிக் குடுமி செங்குத்தாக எழுந்து நிற்கிறது. பூணூல் குதியோ, குதியோ என்று குதிக்கிறது.
பார்ப்பனர்கள் அப்படி என்றால் அவர்களுக்குத் துணை போகும் விபீடண ஆழ்வார்களும், வேடம் போட்ட புலியாகக் குதித்துத் தீர்க்கிறார்கள்.
மாநிலங்களவைக்கு நியமன உறுப்பினர்களாக பா.ஜ.க.வால் ஆக்கப்பட்டவர்கள் யார்? யார்?
- சோ.இராமசாமி - பத்திரிகையாளர் என்ற பெயரில் 1999-2004.
- நிர்மலா சீதாராமன்
- இல.கணேசன்
- சுப்பிரமணியசாமி
- ஜெய்சங்கர்
இந்த அய்வரும் யார்? அய்யர்மார்கள்தானே- பூணூல்காரர்கள்தானே!
இதனை எடுத்துச் சொன்னால், சுட்டிக்காட்டினால் ‘லபோ திபோ!' என்று குதித்துவிட்டால் போதுமா - சமாதானம்தான் ஆகுமா?
மத்திய நிதியமைச்சராக இருக்கக் கூடிய திருமதி நிர்மலா சீதாராமன் எந்தத் தேர்தலிலும் நின்று போட்டியிட்டவர் அல்லர் - இரண்டு முறை மத்திய அமைச்சராக ஆக்கப்பட்டது எந்த அடிப்படையில்?
அக்ரகாரத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே ஒரு தகுதியால் மட்டும்தானே.
மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன் அவர் யார் என்று யாருக்காவது தெரியுமா?
பச்சையாக நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.
‘நான் வெங்காயம், பூண்டு சாப்பிடாத பரம்பரையைச் சார்ந்தவர்' என்று! புரிகிறதா?
பார்ப்பனர்கள் இந்த இரு பொருள்களையும் சமையலில் சேர்க்கமாட்டார்கள், அவ்வளவுதான்.
பச்சைப் பார்ப்பன தர்பார் பளிச்சென்று ஆடுகிறது.
- மயிலாடன்
No comments:
Post a Comment