திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத் தலைவரும் முன்னாள் பகுத்தறிவாளர் கழகத் தலைவரும் பெரியார் பெருந்தொண்டருமான புலவர் அண்ணாமலை நேற்று (23.6.2020) காலை மறை வுற்றார். புலவர் கல்லூரியில் பயிலும் போது பெரியார் பேரூரையாளர் பேராசிரியர் ராமநாதன் அவர்களின் ஆசிரியர் பணி ஏற்ற பின்பு பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்து தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு பகுத் தறிவு ஊட்டியவர்.
ஆலங்காயம் பகுதியில் பணியாற்றும் போது தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்து கூட்டங்கள் பல நடத்தியுள்ளார். தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் இயக்க நிகழ்வுகளில் பங்கேற்றும் உதவிகரமாகவும் இருந்துள்ளார். ஓய்வு பெற்றபின் இயக்கம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம், திருப்பத்தூர் முத்தமிழ் சங்கம் ஆகியவற்றில் பொறுப்பேற்று பல்வேறு பணிகளை செய்தவர். புலவர் அண்ணாமலை அய்யாவின் மறைவுச் செய்தி தெரிந்து திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் சமூக இடைவெளியுடன் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் தோழர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். கருப்புச் சட்டை அணிவித்து உடல்மேல் கழகக் கொடி போர்த்தப்பட்டு எவ்வித மூட சடங்குகளும் இன்றி எளிமையாக உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் மாவட்ட செயலாளர் விஜி இளங்கோ, துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன், இளைஞரணி செயலாளர் பழனிசாமி, திருப்பத்தூர் பெரியார் மாநில துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் கனகராஜ், ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் இரா.பழனி, ஒன்றிய பகுத்தறி வாளர் கழகப் பொறுப்பாளர் தர்மபுரி மண்டல இளைஞரணி செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறைந்த புலவர் அண்ணா மலை அவர்களுக்கு ரஷ்யா என்ற வாழ்வினையரும் குமணன், பகுத்தறி வன் என்ற இரு மகன்களும் முப்பாலிகை என்ற மகளும் கவிதா, ரம்யா என்ற மருமகள்களும் கிருஷ்ணன் என்ற மருமகனும் நாத்திகன், பகலவன், இலக்கியா என்ற பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
- - - - -
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மேனாள் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வி.தேவராசன் அவர்கள் நேற்று (23.6.2020) மாலை 5.50 மணியளவில் மறை வெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி ஊர்வலம் இன்று (24.6.2020) நண்பகல் நடைபெற்றது.
No comments:
Post a Comment