டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- கரோனா அதற்கு முன்னர் இருந்தே துவங்கிய மந்த நிலை காரணமாக இந்தியப் பொருளாதாரம் அதள பாதாள வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என பன்னாட்டு நாணய நிதியம் (அய்.எம்.எப்) கூறியுள்ளதை எடுத்துக்காட்டி புள்ளி விவரங்களுடன் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
- அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தையடுத்து, பேர் அண்ட் லவ்லி எனும் முகக் கிரீம் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் யுனிலீவர், பேர் எனும் பெயர் வெள்ளை நிறத்தைக் குறிக்கும் சொல் என்பதால், அதனை நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது.
டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:
- பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் சில முடிவுறாத நிலையில் ஜூலை 1 முதல் 15 வரை நடைபெற இருந்த மீதம் உள்ள தேர்வுகளை ரத்து செய்வதாக சி.பி.எஸ்.இ. உச்ச நீதி மன்றத்தில் அறிவித்துள்ளது.
- இந்திய லடாக் பகுதியில் ஓர் இடத்தை கூட வேறொருவரும் ஆக்கிரமிக்கவில்லை என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்திருந்தாலும், தற்போது அந்தப் பகுதியில் சீன ராணு வம் குவிக்கப்பட்டு வருவதை இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- பாபா ராம் தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனம், கரோனா தடுப்பு மருந்துக்கான விளம்பரம் செய்து, ஆயுஷ் அமைச்சக வழி காட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தி இந்து, டில்லி பதிப்பு:
- காங்கிரசை தற்போது பாதிப்பது கருத்தியல் தெளிவின்மையே; ஆர்.எஸ்.எஸ்-அய் எதிர்ப்பதற்கு சிலர் ஏன் வெட்கப்படுகிறார்கள்? ஆர்.எஸ்.எஸ்.-ன் பிளவுபடுத்தும் கருத்தியல், ஏழைகளுக்கு, விவ சாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எதிராக ஒருமுகப்படுத்தப்படுகிறது. இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், சமூகப் பொருளாதார இழையையும் அழிக்கிறது என மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை:
- கரோனா அதிகரிப்பு காரணமாக, வழக்கமான ரயில் போக்குவரத்து சேவைகளான விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள் ஆகஸ்டு 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவிப்பு. ஜூலை 1 முதல் ஆக.12 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து. மெட்ரோ ரயில் சேவைகளை இப் போதைக்கு தொடங்க அனுமதி இல்லை எனவும் ரயில்வே தகவல்.
- குடந்தை கருணா,
26.6.2020
No comments:
Post a Comment