திருச்சி மண்டல திராவிடர் கழகம் சார்பில் 'விடுதலை' விளைச்சல் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 12, 2020

திருச்சி மண்டல திராவிடர் கழகம் சார்பில் 'விடுதலை' விளைச்சல் விழா


திருச்சி, ஜூன் 12, விடுதலை 86-ஆம் ஆண்டில், திருச்சி மண்டல திராவிடர் கழகம் சார்பில் விடு தலை விளைச்சல் விழா  5.6.2020 அன்று இரவு காணொலி வழியாக நடை பெற்றது.


திருச்சி மாவட் டத் தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ் தலைமை வகித்து உரையாற்றினார், திருச்சிமண்டல செயலாளர் பா.ஆல்பர்ட் வரவேற்று உரையாற்றினார் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், லால்குடி மாவட்டத் தலைவர் தே.வால்டேர், கரூர் மாவட்டச் செயலாளர் காளிமுத்து ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்,  தொடக்கவுரையாற்றினார். தலைமைக் கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் சிறப்புரை யாற்றினார்.


பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தாமரை, மண்டல மகளிரணி செயலாளர் கிரேசி , மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா, திருச்சி மாநகரத் தலைவர் மருதை, திருவரம்பூர் மாரியப்பன், தமிழ்ச்சுடர், பெல் ஆறுமுகம், லால்குடி மாவட்ட ப.க தலைவர் பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர்கள் கருர் அன்பு, ஜெகநாதன் ஆகியோர் உரையாற்றினார்கள்


திருச்சி மாவட்டச் செயலாளர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.


நிகழ்வில் பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியர் இஸ்மாயில், மலேசியா கணேசன், மதுரை பவுன்ராஜா, பெல் ஆன்டிராஜ், நாகை புபேஸ்குப்தா, அத்திவெட்டி வீரையன், மதுக்கூர் இராதாகிருஷ்ணன், உரத்தநாடு உத்தி ராபதி, பழனி மாரிமுத்து, வேட்டவலம் பட்டாபிராமன், திருச்சி மலர் மன்னன், திருச்சி வி.சி.வில்வம், யாழினி, புதுக்கோட்டை தர்மசேகர், அறந்தாங்கி சந்திரசேகர், கணியூர் ராதாகிருஷ்ணன், இராஜபாளையம் சிவக்குமார், இராமநாதபுரம் அண்ணாரவி, வழக்குரைஞர் வீரமர்த்தினி, கரூர் அய்யப்பன், காஞ்சிபுரம் இளையவேல், தஞ்சை ஏ.வி.என்.குணசேகரன், தமிழ்நேயன், திருத்துறைப்பூண்டி கிருஷ்ண மூர்த்தி,போடிசுருளி, மண்டல இளைஞரணி செயலாளர் வீ.அன்புராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ஆ.இங்கர்சால் காணொலியை ஒருங்கிணைத்தார்.


No comments:

Post a Comment