இந்து மதத்தின் ஜாதி வெறியால் இளம்பெண்ணின்மீது வன்கொடுமை தாக்குதல்
லக்னோ,ஜூன்12 வடமாநிலத்தில் ஒரு பெண்ணின் கையைக் கட்டிவிட்டு பொது இடத்தில் ஆண்கள் சிலர் சேர்ந்து அப்பெண்ணின் பின்பக்கத் தில் தடியால் தாக்குவதும், தலை முடியைப்பிடித்து இழுத்து அடிப் பதும், பலரின் முன்னிலையிலேயே அவள் சேலையை உருவிப்போடுவதும், அப்பெண்ணின் கதறலுடன் காட்சிப் பதிவு வாட்ஸ்அப், முகநூல், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பல ராலும் கண்டனங்களுடன் பகிரப் பட்டு வருகிறது.
இதுகுறித்து ணீறீtஸீமீஷ்s செய்தி இணையதளப் பக்கத்தில் (9.6.2020) குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஒன் இந்தியா (27.5.2020) பஞ்சாப் கேசரி (28.5.2020), டெய்லி மெயில் (28.5.2020) உள்ளிட்ட சில ஊட கங்களில் குஜராத் மாநிலம் சோட்டா உதய்ப்பூர் கிராமத்தில் பெண்மீதான தாக்குதல் நடந்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அக்காட்சிப்பதிவு குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற் கொண்டதில், குஜராத் மாநிலம் பில்வந்த் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் அதே ஊரைச்சேர்ந்த அவரின் ஆண் நண்பருடன் ஊரை விட்டு வெளியேறினார், அப்பெண்ணை கிராமத்துக்கு மீண்டும் அழைத்து வந்து, ஊருக்கு வெளியே வைத்து சிலர் தாக்கியுள்ளனர். அத்தாக்குதல் 21.5.2020 அன்று நடைபெற்றுள்ளது. தைனிக் ஜாக்ரனில் 27.5.2020 அன்று வெளியான தகவலின்படி, ராங்க்பூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, கோல்பொகாடியா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் (வயது 17) அவர் உறவினர் வீட்டில் வசிப்பதாகவும், அதே ஊரைச்சேர்ந்த இளைஞருடன் காதல்வயப்பட்டு, சில நாள்களுக்குப்பின்னர், அப் பெண்ணின் நண்பருடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும், அப் பெண்ணின் உறவினர்கள் அவரைத் தேடத் தொடங்கி, மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் கண்டுபிடித்து, அப்பெண்ணை திரும்பவும் பில்வாந்த் கிராமத்திற்கே அழைத்து வந்து, கயிறால் அவர் கை களைக் கட்டிவைத்து மிக மோசமாக தடியால் தாக்கியுள் ளனர். தலைமுடி யைப்பிடித்திழுத்தும், ஆடையை உரு வியும் தாக்கியுள்ளனர். அப்பெண் ணின் தந்தை அவளைக்காப்பாற்ற வந்தபோது, அவரையும் தாக்கியுள் ளனர். இது குறித்த புகாரின்பேரில் பில்வாந்த் கிராமத்தைச் சேர்ந்த 15 பேர்மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று குறிப்பிடப்பட் டுள்ளது.
பாஜகவுக்கு நெருக்கமான வட்டா ரத்தி¢ல் உள்ளவரும், டில்லி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அகாலிதள் கட்சியைச் சேர்ந்தவருமான மஞ்ஜீந்தர் சிங் சிர்சா சுட்டுரைப்பதிவில் உத்தரப்பிரதேச மாநில காவல்துறை இதுகுறித்து விசாரணை செய்து, குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார். -இவ்வாறு ஆல்ட் நியூஸ் இணையத்தில் (9.6.2020) குறிப் பிடப் பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு மூலையில் எது நடந்தாலும், அறிவியல் சாதனங்களின் துணையால் எல்லைகளைக்கடந்து காட்சிப் பதிவுகளாக பரவிவிடுகிறது. ஒரு பொது இடத்தில்வைத் து இளம் பெண் பலரால் தாக்கப்படுவதும், அதன் காட்சிப் பதிவு சமூக ஊட கங்களில் பகிரப்படுவதும் பாஜக ஆட்சியின் யோக்கியதையை வெளிச் சம் போட்டு காட் டுவதாகவே உள் ளது. 21ஆம் நூற் றாண்டிலும், ஒடுக்கப்பட்ட வர்கள் மற்றும் பெண்கள்மீதான வன்முறை, வன்கொடுமை கள் இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. பெரி தும் இன்று ஜாதி வெறி, மத வெறி யாகவே உள்ளன.
No comments:
Post a Comment