ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 24, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:    



  • கரோனா நோய்க்கு மருந்தினைக் கண்டுபிடித்துள்ளதாக பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்வதற்கு மத்திய அரசின் ஆயுஸ் அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது குறித்து முழு விவரத்தையும் தருமாறு அமைச்சகம் பதஞ்சலி நிறுவனத்திற்கு கட்டளையிட்டுள்ளது.

  • கரோனா தொற்று, இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் குழந்தைகளை வெகுவாக பாதிக்கும் என்றும் ஓர் ஆண்டில் எட்டு லட்சம் குழந்தைகளுக்கு மேல் இறக்க வாய்ப்புள்ளது என்றும் அய்க்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான அவசர நிதியம் (யுனிசெப்) எச்சரித்துள்ளது.

  • இந்திய லடாக் எல்லையில் சீன ராணுவம் நுழையவில்லை என பிரதமர் மோடி கூறுவது உண்மையெனில், பிறகு என்ன காரணத்திற்காக இரு நாட்டு ராணுவத் தலைவர்களும் பதினொரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்? முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து மத்திய அரசு இப்பிரச்சினையைக் கையாள வேண்டும். அவதூறு பேச்சு கூடாது என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

  • பூரி ஜெகந்நாதர் ரதயாத்திரையை அனுமதித்தால், ஜெகந்நா தரே மன்னிக்க மாட்டார் என்று சொன்ன உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் பத்து நாள் ரதயாத்திரையை அனுமதித்து அது தொடங்கியும் விட்டது. இதில் எந்தளவு கட்டுப்பாடு காப்பாற்றப் படுகிறது என்பதைப் பொருத்து மற்ற விழாக்கள் நடத்திட அரசு முடிவெடுக்க முடியும் என்று தலையங்கச் செய்தி கூறுகிறது.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:    



  • இணையம் வழியே பள்ளிக் கல்வி நடைபெற்றால், மாணவர் களின் சுகாதாரம், கண் பாதிப்பு உட்பட எந்த அளவு பாதிக்கப்படும் என்பது குறித்து எழும்பூர் அரசு கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பணித்துள்ளது.

  • அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய தரப்படும் ஹெச்.1.பி விசாவை வரும் டிசம்பர் 2020 வரை நிறுத்தி வைத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவால், தமிழ்நாட்டில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் அவரது குடும்பத்தினர் வெகுவாகப் பாதிக்கப்படுவர். மத்திய பாஜக அரசு அமெரிக்க அரசுடன் இதுகுறித்து பேசி டிரம்பின் உத்தரவைத் திரும்பப் பெற உடன் முயற்சிக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • பீகாரில் லாலு பிரசாத் கட்சியான ஆர்.ஜே.டி.யில் இருந்து அய்ந்து எம்.எல்.சி.க்கள் விலகியுள்ளனர். கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்து மூத்த தலைவர் ரகுவந்த் பிரசாத் சிங் விலகியுள்ளார். தேர்தல் வரும் நேரத்தில், இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


தி இந்து, டில்லி பதிப்பு:



  • சங்கர் ஆணவக் கொலை வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம், கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்து அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கதல்ல; போதிய சான்றுகளை முறையாக தெரிவிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என இந்து நாளிதழ் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

  • மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் இந்திய எல் லைக்குள் சீனா பல முறை அத்துமீறி நுழைந்துள்ளது என்ற பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவின் குற்றச்சாட்டுக்கு, தற்போது மோடி ஆட்சி யில் 2264 முறை சீனா அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்துள்ளது. இதனை பா.ஜ.க. தலைவர், பிரதமர் மோடியைப் பார்த்து கேட்பாரா? என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்து உள்ளார்.


- குடந்தை கருணா,


24.6.2020


No comments:

Post a Comment