மதங்கள் அன்பினால் பரப்பப்பட்டதா?
இன்று ஒவ்வொரு மார்க்கத்தினுடைய சரித்திரமும் அந்தந்த மதங்கள் வாளாயுதம் இல்லாமல் வளர்ந்ததாகக் கூறவில்லை. ஏன் அதிக தூரம் போகவேண்டும்? இந்து மதத்தை எடுத்துக் கொள்வோம். அது அன்பினால் பரப்பப் பட்டதா? சன்மார்க்கத்தால் பரப்பப்பட்டதா? ஜீவகாருண் யத்தால் பரப்பப்பட்டதா?
அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் மதுரை யில் வருடா வருடம் நடைபெற்றுவரும் திரு விழாவைப் பாருங்கள். அங்கு 8,000 சமணர்களைக் கழுவேற்றியதையே காட்டப்படுகிறது. இது எதைக் காட்டுகிறது? அன்பையா? ஜீவ காருண்யத்தையா? சன்மார்க்கத்தையா?
இனி வைணவ மதத்தை எடுத்துக் கொள்வோம். அந்த மதக்காரர்கள் மற்ற கோயில்களை இடித்துக் கொள்ளை அடித்தே அவர்கள் கோயில்களைக் கட்டினார்கள் எனப் பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள். அதற்குச் சீரங்கம் கோவிலே உதாரணமாகும்.
இப்படியெல்லாம் இருக்க ஒரு மதத்தினர் மற்ற மதத்தினரை ஏன் பரிகசிக்க வேண்டும்?
- தந்தை பெரியார், ‘குடிஅரசு’, 11.06.1939
- ‘மணியோசை’
No comments:
Post a Comment