காரைக்குடி புரட்சிக் கவிஞர் விழாவுக்கான நிதி விடுதலை வளர்ச்சிக்கு வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 10, 2020

காரைக்குடி புரட்சிக் கவிஞர் விழாவுக்கான நிதி விடுதலை வளர்ச்சிக்கு வழங்கப்பட்டது

கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல் பட்டுவரும் காரைக்குடி பாரதிதாசன் தமிழ்ப் பேரவை, ஒவ்வோராண்டும் புரட்சிக்கவிஞர் விழா வையும் நடத்தி வருகிறது. இதற்கென உருவாக்கப் பட்டுள்ள வைப்புநிதியிலிருந்து வட்டித் தொகை யையும், நன்கொடைகளைத் திரட்டியும் விழா நடத்தப்பட்டுவந்த சூழலில், இவ்வாண்டு கரோனா பெருந்தொற்று காரணமாக விழாவை தனி நிகழ்ச்சி யாக நடத்திடாமல், காணொலி நிகழ்ச்சியாக நடத் திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக  நிகழ்ச்சிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த, பாரதி தாசன் தமிழ்ப்பேரவையின் வைப்பு நிதியிலிருந்து கிடைத்த ஓராண்டு வட்டித் தொகை ரூ.11,402/- விடுதலை வளர்ச்சி நிதியாக வழங் கப்பட்டுள்ளது. இதற்குரிய தொகையை பேரவையின் நிறுவனர் சாமி. திராவிடமணி அனுப்பி வைத்துள்ளார்.   


No comments:

Post a Comment