கரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற முதல்வர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 23, 2020

கரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற முதல்வர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்

மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



சென்னை,ஜூன்23, தமிழக எதிர்க் கட்சித் தலைவர், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:


'கோவிட்-19' கொடிய நோய்த் தொற்றைத் தடுப்பதில் படுதோல்வி யடைந்து - ''கரோனா எப்போது ஒழி யும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்'' என்று இயலாமையால் கைவிரித்து நிற்கும் முதல்வர் பழனிசாமி ஜூன் 19ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளையாவது பின்பற்றி, தமிழக மக்களை கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத் திட முன்வர வேண்டும்.


நாடு முழுவதும் கோவிட்-19 நோய்க்குச் சிகிச்சை அளிப்பதில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ''நோய்க் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை'' நடவடிக்கை களில் ஒளிவு மறைவற்ற வெளிப்படைத் தன் மையை உறுதி செய்திட மாநிலங்களுக்கு மிக முக் கியமான கட்ட ளைகளை இந்திய உச்சநீதிமன்றத் தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித் திருப்பது, சமூக அக்கறை யுள்ள அனைவராலும் வரவேற்கத் தக்கது. குறிப்பாக, இந்த வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடி யாமல் திணறும் அதிமுக அர சின் பிடியில் சிக்கி - தினமும் பதற்றத் திலும் அச்சத்திலும் வாழ்ந்து கொண் டிருக்கும் தமிழக மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய  தீர்ப்பு அது. ஜூன் 12ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த உத்தர வுப்படி, அதிமுக அரசு பரிசோதனைகளை மேற் கொள்ளவில்லை என் பது- அன்றைக்கு 6,32,256 ஆக இருந்த ''கரோனா பரி சோதனை'' செங் குத்தாக 12 லட்சத்திற்கு இன்று வரை உயர வில்லை என்பதிலிருந்தே தெரிகிறது.


உச்சநீதிமன்றத்தின் உயிர்காக்கும் உத்தர வையே, சரியாகப் புரிந்து கொள்ளா மல் அலட்சியம் செய்து, அதிமுக அரசு புறக்கணித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கரோனா சோதனை செய்யாமல்- இந்த நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தானா கவும் நடவடிக்கை எடுக்க முதல மைச்சருக்கு மனப் பக்குவம் இல்லை. அனைத்துக் கட்சிகளின் கூட் டத்தைக் கூட்டி ஆலோசனை பெற வும் அவருக்கு ஜனநாயக ரீதியான எண்ணம் இல்லை. எந்தப் பக்கம் இருந்து ஆலோசனைகள் வந்தாலும் அவற்றை ‘அரசியல்’ என்று மிகச் சாதாரணமாக  அலட் சியப்படுத்தி வரும் முதல்வர், இப் போது உச்சநீதி மன்றம் அளித்துள்ள கட்டளை களையாவது- ஒரு நல் வாய்ப்பாகப் பயன்படுத்தி- தமிழக மக்களைக் காப்பாற்ற, அவற்றை முறையாக அணுகி- உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண் டிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட் டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 


புதுச்சேரியில் மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதம் : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு


புதுச்சேரி,ஜூன் 23, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது: புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது. அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். புதுச் சேரி கடற்கரை 10 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும். தொழிற் சாலைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மதுக்கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல் படும். பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும். மேலும், பால் விற்பனை மையங்கள் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


ஜூன் 23 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment