கேட்டுச் சொல்லுங்கள் பூணூல் அய்யர் வாளே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 23, 2020

கேட்டுச் சொல்லுங்கள் பூணூல் அய்யர் வாளே!


கேள்வி: திராவிடமென்றால் எங்கெல்லாம் சாமா னிய சமூகத்திற்குத் தீங்கு இழைக்கப்படுகிறதோ, அங் கேயே போய் தட்டிக் கேட்பதுதான் திராவிடமாமே?


பதில்: நல்ல விளக்கம் அந்த விளக்கத்துக்கு மேலும் விளக்கம் தேவை. அந்த சாமானிய சமுதாயத் தில் மைனாரிட்டிகள் மட்டும்தான் இருப்பார்களா? ஹிந்துக்களும் இருப்பார்களா?


('துக்ளக்' 1.7.2020 பக்கம் 10)


ரொம்ப சரி, கண்டிப்பாக தீங்கிழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள்  பக்கத்தில் திராவிட இயக்கத்தவர்கள் இருப் பார்கள்.


 உங்களுக்குச் சந்தேகம் தேவையில்லை.


'துக்ளக்'க்கு ஒரு கேள்வி.  'ஹிந்து' மதத்தில்  நீங்கள் கூறும் அந்த  ÔசாமானியÕ தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பார்களா? சங்கராச்சாரியாரைக் கேட்டுச் சொல்லுங்கள். ஏனெனில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகந்திர சரஸ்வதி தீண் டாமை  க்ஷேமகர மானது என்று சொல்லியிருக்கா.


தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் அர்ச்சகரானால், சாமி செத்துப் போய்விடும்  - தீட்டாகி விடும் என்று பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடியிருக்கா.


பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை ஆவணத் தில் ஹிந்துக்களுக்கு மட்டும் என்று கூறியிருப்பதால் தாழ்த்தப்பட்டவர்களைப் பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதில்லை என்று விளக்கம் சொன்னவர் எல்லாம் இருக்கா.


ஹிந்து மதத்தில் பொது சுடுகாட்டுக்கு வாய்ப் பில்லை; அவரவர்களுக்கும் தனித்தனி சம்பிரதா யங்கள் உண்டு - மின் சுடுகாடு ஹிந்து தர்மத்துக்கு விரோதமானது என்று ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்த சங்கராச்சாரியார் 'திருவாய்' மலர்ந்தருளி யிருக்கா!


உலகத்தில் உயர்ந்த சோப்பினை போட்டுக் குளிப்பாட்டினாலும் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தீண்டாமையைப் போக்க முடியாது என்று சிருங்கேரி சங்கராச்சாரியார் சொல்லியிருக்கா.


ஹிந்து மதத்தில் நான்கு வருணத்துக்குள்கூட தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்காமல் அவர் ணஸ்தர்கள் என்ற நிலை உண்டு.


எனவே அவாள் ஹிந்து மதத்தில் இருக்காளா? காஞ்சி மடத்தில் இப்போது சங்கராச்சாரியார் இருந் தால், அவாளிடம் கேட்டு சொல்லுங்கோ சிறீமான் பூணூல் குருமூர்த்தி அய்யர்வாளே!


ஜாதி - தீண்டாமை  ஒழிப்புக்கான பிரச்சாரத்தையும் போராட்டங்களையும் (ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரித்து ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள்  மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்றது உட்பட) திராவிடர் இயக்கம் நடத்தியது உண்டு.


தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட அர்ச்சகராக வேண்டும் என்பதற்காகக் களம் கண்டதும், அதற் கான சட்டம் செய்ததும்,  அனைத்து  ஜாதியினரும் ஒரே இடத்தில் பழகி வாழும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களைக் கண்டதும் திராவிடர் இயக்கம்தான், தந்தை பெரியார்தான், தி.மு.க.தான், கலைஞர் ஆட்சியில்தான்.


இந்த வகையில் சங்கர மடமோ, பார்ப்பனர்களோ ஹிந்துத்துவாவாதிகளோ செய்தது என்ன என்று விரலை மடக்கிச் சொல்லுங்கள் பார்க்கலாம்.


- மின்சாரம்


No comments:

Post a Comment