ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்
உ டன் உண்ணல் (சமபந்தி போஜனம்) என்ற உரிமைப் போர்
கேளுங்கள் நாட்டினரே!
நாம் அனைவரும் சமம் என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே பேசுகின்றனர். ஆரியர், திராவிடர் என்ற பாகுபாடு கூட இல்லை, அது அர்த்தமற்ற கூச்சல் என்று ஆர்ப்பரிக்கின்றனர். ஆனால் நாமோ சிறுத்தையின் தோலின் மீதுள்ள புள்ளியும் மறையாது, பார்ப்பனரின் ஜாதித் திமிரும், அழித்தாலன்றி அடங்காது என்று கூறுகிறோம்.
தஞ்சை ஜில்லா திருவையாறு என்ற ஊரிலே, தஞ்சை மன்னன் மான்யத்தைப் பெற்று சமஸ்கிருத காலேஜ் ஒன்று நடந்து வருகிறது. தஞ்சை ஜில்லா போர்டின் ஆட் சிக்கு உட்பட்ட காலேஜ். அங்கு சமஸ்கிருத போதனை மட்டுமே முன்னம் இருந்தது. மறைந்த திராவிடமணி சர். பன்னீர்செல்வம் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது, அதிலே தமிழும் போதிக்க உத்தரவிட்டார். அக்கிரகாரம் சீறிற்று, அவர் அஞ்சவில்லை. டிசம்பர் மாதம் 2ஆம் தேதி தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தோழர் நாடிமுத்துப் பிள்ளை, மேற்படி காலேஜிலுள்ள ஹாஸ்டலில், ஜாதிபேதம் கூடாது என்று கருதி, பிராமண ரும் பிராமணரல்லாதாரும் ஒன்றாகவே சாப்பிடவேண் டும் என்ற தீர்மானத்தை ஜில்லா போர்டு கூட்டத்திலே நிறைவேற்றினார்.
அந்த தீர்மானம் ஜனவரி 27ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.
இந்த ஹாஸ்டலில், 70 பார்ப்பனரல்லாத மாணவர் களும் 45 பார்ப்பன மாணவர்களும் உள்ளனர்.
சமபந்தித் தீர்மானம் அமுலுக்கு வந்ததும், இந்த 45 பார்ப்பன மாணவர்களும், ஜில்லா போர்டு தீர்மானத் தைக் கண்டித்து, ஹாஸ்டலில் சாப்பிட மறுத்துவிட்டனர். அக்கிரகாரத்திலே சென்று சாப்பிட்டார்கள். பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும் சமமாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற உத்தரவைக் கண்டு அக்கிரகாரம் பதறுகிறது, உறுமுகிறது.
இதன் கருத்து என்ன? பார்ப்பனர் இன்றும், தமிழரை விட மேலான ஜாதியார், தனியான ஜாதியார், என்ற திமிரான கருத்துடன் இருப்பதைத்தானே காட்டுகிறது? பார்ப்பனரல்லாதாருடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட் டால், தீட்டுப்பட்டுவிடும், இழிவு நேரிடும் என்று கருதும், வர்ணாஸ்ரம மனப்பான்மை இருப்பதைத்தானே காட்டு கிறது. பார்ப்பனரல்லாதாருடன் சேர இருந்து உண்டால், உணவு விஷமாகிவிடுமா? குடல் கருத்துவிடுமா? எது கெட்டுவிடும்?
தமிழரோடு சேர்ந்து உணவருந்த மறுக்கும் பார்ப்பன ஜாதித்திமிருக்கு, என்ன பாடம் கற்பிக்கப் போகிறீர்கள்! தமிழரே உமது ரோஷம் பொங்கவில்லையா? வெட் கமும் ‘துக்கமும் கிளம்பவில்லையா? நீங்களும் மனி தர்கள் தான் என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கும் பார்ப் பன ஜாதியின் பதற்றம் எப்போதுதான் தொலைவது! என்று நீங்கள் சுயமரியாதை பெறுவது? எண்ணுங்கள். ஆவன செய்யுங்கள்!
(விடுதலை’, 29-01-1941)
பார்ப்பன கும்பகோண மடத்தின் சங்கராச்சாரியார் (அவர்தான் பிறகு காஞ்சி சங்கராச்சாரியார் ஆனவர்). மூலவராக இருந்து, பிரபல படித்த வக்கீல், மேதைகளை யெல்லாம் விட்டு எதிர்ப்பு காட்டி, ஜில்லா போராடியும் அந்த ஏற்பாட்டினை மாற்றியதை ரத்து செய்து பழைய படியே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாத தனித்தனியே சாப்பிட வற்புறுத்தி ஓர் அணியிலே திரண்டனர்.
அது பற்றிய அந்நாளைய விடுதலையில்!
பார்ப்பனர் படை திரட்டுகின்றனர்
பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளப் படை திரட்டப் புறப்பட்டுவிட்டனர். அவர் கள் படை, துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் கொண்டு எதிரிகளுடன் போராடும் வீரப்படையல்ல; சாத்திரங்களையும் புராணங்களையும் கொண்டு பகுத் தறிவற்ற மக்களை அடிமைப்படுத்தித் தங்கள் சாதி உயர்வை நிலைநாட்ட முயலும் வஞ்சகப் படையே யாகும்.
இனியும் இந்த வஞ்சகப் படையின் மிரட்டல்களுக் கும், புரட்டுகளுக்கும் செவிசாய்த்துப் பொது மக்கள் ஏமாறப் போகிறார்களா என்பதே இப்பொழுது நமது கேள்வி.
வெளி வந்தார்கள்!
தஞ்சை ஜில்லா போர்டில் சமபந்தி உணவை ஆதரித்துச் செய்த தீர்மானமே இந்த வஞ்சகப் படைக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பிவிட்டது.
சமபந்தி உணவைக் கண்டித்துப் பிச்சைச் சோற்றை அதிகாரத்துடன் பெறப்பிறந்த சில வைதீகப்பித்துப் பிடித்த பார்ப்பனர்கள் வாய்விட்டு அலறினர். அந்த அலறல் இன்று தோழர்களான ரைட் ஆனரபில் சீனி வாச சாஸ்திரியார், சர்.பி.எஸ். சிவசாமி அய்யர், டி.ஆர். வெங்கட்ட ராமசாஸ்திரியார், ராவ் பகதூர் ஜி.எ.நடேசன், கே.வி. கிருஷ்ண சாமி அய்யர், கே. பாலசுப்பிரமணிய அய்யர், ஆர். முத்துசாமி அய்யர் போன்ற பார்ப்பனர் களையெல்லாம் வெளியில் இழுத்துவிட்டது.
இந்தப் பார்ப்பன சமூகப் பிரமுகர்களெல்லாம் சென்ற 6-4-1941 மயிலாப்பூர் ரானடே ஹாலில் ஒரு கூட்டம் கூடினர். இக்கூட்டத்தில் தலைமை வகித்தவர், பிரபல அரசியல்வாதியும், பலதடவை பிரிட்டிஷ் அர சாங்கத்தின் சாரணராக மேல் நாடுகளில் சுற்றுப்பிர யாணம் செய்தவரும், எந்த வித்தியாசமும் பாராட்டாமல் எல்லோருடனும் கலந்து உட்கார்ந்து விருந்துண்பவரும், சமூகச் சீர்த்திருத்தத்தில் தனக்கு மிகவும் அக்கறையுண்டு என்று சொல்லிக் கொள்பவருமாகிய மகாகனந்தங்கிய, தோழர் சீனிவாச சாஸ்திரியார் அவர்கள்.
சொந்தக் கருத்து!
இவர் அக்கூட்டத்தில் சமூகச் சீர்த்திருத்தத்தைப் பற்றிப் பேசும்போது தன் சொந்தக் கருத்தென்று சில உண்மைகளைக் கூறினார்.
“ஜாதி வித்தியாசங்களை ஒழித்துவிட்டு, சமபந்தி போஜனத்துக்கு ஏற்பாடு செய்வது காலப்போக்கை முற்றிலும் அனுசரித்தது என்றும், எனவே அதைப் பின் பற்றுமாறு மக்களின் ஒரு பகுதியைக் கட்டாயப்படுத்து வதில் தீங்கு ஒன்றுமில்லை யென்றும், இந்து சமூகம் எல்லாவகைகளிலும் ஒரே மாதிரியாகும் காலம் வரு வதை இது துரிதப்படுத்துமென்றும் கூறப்படலாம். இது விரும்பத்தக்க லட்சியந்தான் என்பது என் சொந்த அபிப் பிராயம்“.
உண்மையில் இது அவருடைய சொந்த அபிப்பிரா யமாக இருந்தால் - அவரால் நம்பக்கூடிய அபிப்பிராய மாக இருந்தால் நாட்டுக்கு நன்மை தரக்கூடிய இந்த அபிப்பிராயத்திற்குப் பாடுபட முன்வருவதே நேர்மை யும், ஆண்மையும், அறிவுடைமையும் ஆகும். ஆனால், சொந்த அபிப்பிராயத்திற்கு மாறாக நடப்பதென்று சொன்னால், அதைப்பற்றி நாம் என்ன தான் சொல்லு வது? தோழர் சாஸ்திரியார் மாத்திரம் இப்படியென்று சொல்லிவிட முடியாது. அவர்களுடைய ஜாதியே இம் மாதிரி தான். சொல்வேறாகவும் செய்கை வேறாகவும் இருந்து காரியங்களை நடத்திக் கொண்டு வருகிறது என்று சொல்லி விடும்படியான முடிவைச் சாஸ்திரியார் அவர்களின் பேச்சே ஏற்படுத்திவிட்டது.
இது யார் கருத்தோ!
அவர் அக்கூட்டத்தில் சமபந்தி உணவைக் கண் டித்துப் பேசியதைக் கவனிப்போம்.
“தீவிர மாறுதல்களைச் செய்ய சட்டம் இடங் கொடுப் பதாக வைத்துக் கொண்டாலும், இது யுத்தமா? தர்மமா? தர்மகர்த்தாப் பொறுப்பைச் சரிவர நிருவகிப் பதாகுமா? என்ற கேள்விகள் எழுகின்றன. இதைப் பற்றிச் சந்தேக மிருக்க முடியாது. பிடிவாதமாய் இந்தப் போக்கு அநுஷ் டிக்கப்படுமானால் பிராமணர்களுக்கு இந்த தர்மத்தின் பயன் இல்லாமற் போய்விடும்.
கட்டாய சமபந்தி போஜனத்தை ஏற்படுத்தியதன் உடனடியான விளைவு பிராமண மாணவர்கள் சாப்பாடு வசதிகளை இழக்கும்படியாக நிர்பந்தப்படுத்துவதுதான்.
பிராமணரல்லாத மாணவர்களுடன் பிராமண மாணவர்களும் சேர்ந்துதான் சாப்பிட வேண்டும், என்று கட்டாயப்படுத்துவதன் தவிர்க்க முடியாத விளைவு, பிராமண மாணவர்கள் வைதீக வட்டாரங்களில் எக் காலத்திலும் சேர்க்கப்படுவதற்கு அவர்கள் லாயக்கற்ற வர்களாக்கிவிடும்.
எனவே இந்த ஸ்தாபனத்தில் எந்தக் காரியத்துக்காக அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறதோ அதைச் செய்வதற்கு முடியாமற் போய்விடும்.”
மேற்கூறிய சொற்றொடர்கள், தோழர் சாஸ்திரியாரின் உள்ளத்தில் தோன்றி, வாய் வழியாக வெளிவந்ததென்ப தில் சந்தேகமில்லை. நாம் மேலே எழுதியுள்ள வாக் கியங்கள் தினமணியில் வெளிவந்துள்ள செய்தியிலி ருந்தே எடுத்தவை. ஆகவே இந்தக் கருத்துக்கும், முன் சொந்தக்கருத்து என்று அவர் கூறியதாக எடுத்துக் காட் டியிருக்கும் கருத்துக்கும் உள்ள வேறுபாட்டை நோக்குங்கள்.
உண்மைக் கருத்து
பின்னால் நாம் எடுத்துக் காட்டியிருக்கும் தொடர் களில் உள்ள கருத்தை ஊன்றி நோக்கினால் பார்ப்பன சமுதாயத்தின் பேராசையும் ஆணவமும் இன்னவை யென்று விளங்கும்.
பார்ப்பன மாணவர்கள் ஒருக்காலும் பார்ப்பனரல் லாத மாணவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட முடியாது.
பார்ப்பனரல்லாத மாணவர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் பார்ப்பன மாணவர்கள் ஜாதியை விட்டு நீக்கப்படுவார்கள்.
சமஸ்கிருதப் படிப்பே பார்ப்பனர்களின் உயர்வை யும், வருணாச்சிரம தருமத்தையும் நிலைநாட்டவே காப்பாற்றப்படுகிறது.
என்ற கருத்துகள் தோழர் சாஸ்திரியாரின் வார்த்தை களில் அடங்கிக் கிடக்கின்றன.
இந்தக் கருத்தை அவர் தாராளமாக வெளியிட்ட தற்காகவும், மற்றும் பிரபல அரசியல் பார்ப்பனர்களும் சமூகச் சீர்த்திருத்தம் பேசும் பார்ப்பனர்களும், இதை மறுத்து ஒரு வார்த்தை கூட கூறாமலிருந்ததற்காகவும் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஏன்? இப்பொழுதாவது, பார்ப்பனரினும், ஜாதித் துவேஷமற்ற சமரசப் பார்ப்பனர் கள் உண்டு என்று கண்மூடித்தனமாக நம்பிக் கொண் டிருப்போர் யாராவதிருந்தால் அவர்கள் உண்மையை அறியக் கூடும் அல்லவா?
வரும் புதன் அன்று தொடரும்
No comments:
Post a Comment