பீகார் தேர்தல் - 65 வயதுக்கு மேற்பட்ட குடிமகன்கள் அஞ்சல் ஓட்டுப் போட முடியாது: தேர்தல் ஆணையம் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 18, 2020

பீகார் தேர்தல் - 65 வயதுக்கு மேற்பட்ட குடிமகன்கள் அஞ்சல் ஓட்டுப் போட முடியாது: தேர்தல் ஆணையம் முடிவு

புதுடில்லி, ஜூலை 18- பீகாரில் 243 பேர் கொண்ட சட்டசபை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற அக்டோபரில் நடைபெற உள்ளது.  இதில் ஆளும் அய்க்கிய ஜனதா தளம், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ராஷ் டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன.


இந்த தேர்தல் மற்றும் வரவிருக்கும் பிற இடைத்தேர்தல்களிலும், 65 வயதுக்கு மேற்பட்ட குடிமகன்களுக்கு அஞ்சல் ஓட்டுப் போடுவதற்கான வசதியை நீட் டிக்கப் போவதில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.


ஆனால், 80 வயதுக்கு மேற்பட்ட மாற் றுத்திறனாளி வாக்காளர்கள், அத்தியா வசிய சேவைப் பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் கரோனா பாதித்து வீடு மற்றும் பிற அமைப்புகளில் தனிமைப்படுத்தப்பட் டவர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment